மீண்டும் உடல்நலக்குறைவு? - வெளிநாடு சென்றார் சோனியா...

 
Published : Mar 10, 2017, 10:21 AM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
மீண்டும் உடல்நலக்குறைவு? - வெளிநாடு சென்றார் சோனியா...

சுருக்கம்

For the past few days affected by illness Congress president Sonia Gandhi went abroad for medical treatment

கடந்த சில நாட்களாக  உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ள  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவ சிகிக்சைக்காக வெளிநாடு புறப்பட்டுச் சென்றார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பல மாதங்களாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

சென்ற  ஆண்டு ஆகஸ்டு மாதம், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற  வாகன பேரணியின்போது  திடீரென அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து சோனியா  டெல்லிக்கு விமானத்தில் அழைத்து செல்லப்பட்டு, ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து தனியார் மருத்துமனையிலும் அவர் சிகிச்சை பெற்றார்.

தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கட்சி உட்பட எந்த வெளி நிகழ்ச்சிகளிலும் சோனியா கலந்த கொள்ளவில்லை.

அண்மையில் நடைபெற்ற உத்தரபிரதேசம், மணிப்பூர், கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களின்  சட்டசபை தேர்தல்களிலும் சோனியா காந்தி  பிரசாரம் மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில், சோனியாகாந்தி திடீரென  வெளிநாடுக்கு புறப்பட்டு சென்றார். அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்று இருப்பதாகவும், ஹோலி பண்டிகை முடிந்த பிறகு வரும்  13-ந் தேதிதான் டெல்லி திரும்புவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சோனியா  எந்த நாட்டுக்கு சென்றுள்ளார், எங்கு சிகிச்சை பெறுகிறார் போன்ற எந்த விபரங்களும் வெளியிடப்படவில்லை. அனேகமாக அவர் அமெரிக்கா சென்றிருக்கலாம் என  கூறப்படுகிறது.

வெளிநாட்டுக்கு செல்வதற்கு முன்பு, கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி மற்றும் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய சோனியா காந்தி டெல்லி திரும்பும்வரை, அவரது கட்சிப்பணிகளை ராகுல் காந்தி கவனிப்பார்  என அறிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

சீனாவில் இந்திய யூடியூபர் கைது! அருணாச்சல் பற்றி பேசியதால் 15 மணிநேரம் பட்டினி போட்டு விசாரித்த அதிகாரிகள்!
'பாரத் டாக்ஸி' மொத்த லாபமும் ஓட்டுநர்களுக்கே பகிர்ந்தளிக்கப்படும் அமித் ஷா திட்டவட்டம்