சோனியா காந்தி டிஸ்சார்ஜ்! .ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்

Asianet News Tamil  
Published : Oct 28, 2017, 05:25 PM ISTUpdated : Sep 19, 2018, 01:21 AM IST
சோனியா காந்தி டிஸ்சார்ஜ்! .ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்

சுருக்கம்

Sonia Gandhi discharge

வயிற்று வலி காரணமாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங். தலைவர் சோனியா காந்தி, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அண்மையில் சிம்லா சென்று இருந்தார். சிம்லா சென்றிருந்த நிலையில் திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர் டெல்லிக்கு கொண்டுவரப்பட்டு ஸ்ரீகங்கா ராம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சோனியா காந்திக்கு, வயிற்று வலி காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறினர். இதனைத் தொடர்ந்து அவருக்கு தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். 

சோனியா காந்தி தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பிலேயே இருந்து வந்தார். சோனியா காந்தி குறித்து ராகுல் காந்தி, டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டிருந்தார். அதில், சோனியா காந்தி நன்றாக உள்ளதாக அதில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் சோனியா காந்தி, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சோனியா காந்தியின் உடல்நிலை நன்றாக உள்ளதாகவும், அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிகிறது.

PREV
click me!

Recommended Stories

12,000 அடி உயரத்தில் பதுங்கு குழியில் ஜெய்ஷ் பயங்கரவாதிகள்..! உயிர் பிழைக்க பதுக்கிய அரசி- மேகி..!
நிதின் நபின் என்னுடைய பாஸ்; நான் சாதாரண தொண்டன்.. பிரதமர் மோடி புகழாரம்!