சோனாலி போகட் இறப்பில் புதிய திருப்பம்… கோவா காவல்துறை அதிர்ச்சி தகவல்... வைரலாகும் சிசிடிவி காட்சி!!

By Narendran SFirst Published Aug 26, 2022, 6:04 PM IST
Highlights

சோனாலி போகட் இறப்பதற்கு முன் அருவருப்பான ரசாயனம் கலந்த போதைப்பொருளை உட்கொண்டதால் அவர் நிதானம் இழந்ததாக கோவா காவல்துறை தெரிவித்துள்ளது. 

சோனாலி போகட் இறப்பதற்கு முன் அருவருப்பான ரசாயனம் கலந்த போதைப்பொருளை உட்கொண்டதால் அவர் நிதானம் இழந்ததாக கோவா காவல்துறை தெரிவித்துள்ளது. ஹரியானாவைச் சேர்ந்த சோனாலி போகட் தொலைக்காட்சி  தொகுப்பாளராக மக்களுக்கு அறிமுகமானார். டிக்டாக் சமூக ஊடகங்களில் பல்வேறு வீடியோக்களை சோனாலி போகட் வெளியிட்டு தனக்கென ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தினார். 19 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அவரை டிக்டாக்கில் ஃபாலோ செய்கின்றனர். அவர் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மேலும் புகழடைந்தார். இதை அடுத்து கடந்த 2008 ஆம் ஆண்டில்  பாஜகவில் இணைந்த சோனாலி போகட், கடந்த 2019ம் ஆண்டு ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் ஆதம்பூர் தொகுதியில் போட்டியிட்டார். இந்த நிலையில், கோவாவுக்கு நண்பர்களுடன் சென்ற அவர், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். முன்னதாக கோவா மாவட்டத்தில் உள்ள அஞ்சுனாவில் உள்ள செயின்ட் அந்தோனி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட அவர், மாரடைப்பால் இறந்துவிட்டதாக முதல்கட்டமாக மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

இதையும் படிங்க: congress உடையும் ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ்:குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக நிர்வாகிகள் விலகல்

இருந்த போதிலும் அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக எண்ணிய காவல்துறை இதுத்தொடர்பாக அவரது உதவியாளர்கள் இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் சோனாலி போகத் இறப்பில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. சோனாலி போகட் இறப்பதற்கு முன் அருவருப்பான ரசாயனம் கலந்த போதைப்பொருளை வலுக்கட்டாயமாக திரவத்தில் கலந்து அவரை குடிக்க வைத்ததாக கோவா காவல்துறை தெரிவித்துள்ளது. இதுக்குறித்து பேசிய கோவா ஐஜிபி கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் சோனாலி போகட்டை வலுக்கட்டாயமாக போதைப்பொருளை உட்கொள்ளச் செய்ததாக தெரிகிறது. குற்றம் சாட்டப்பட்ட சுக்விந்தர் சிங் மற்றும் சுதிர் சங்வான் ஆகியோர் வேண்டுமென்றே அருவருப்பான ரசாயனத்தை திரவத்தில் கலந்து அவரை குடிக்க வைத்ததாக ஒப்புக்கொண்டனர்.

இதையும் படிங்க: காலியாகும் காங்கிரஸ் கூடாரம்!வெளியேறிய 7வது பெரிய தலைவர் குலாம் நபி ஆசாத்: இதுவரை எத்தனை பேர்?

இது அவரது மரணத்திற்கு வழிவகுத்திருக்கலாம். அதன் பிறகு, அவர் கட்டுப்பாட்டில் இல்லை. அதிகாலை 4:30 மணிக்கு அவர் கட்டுப்பாட்டில் இல்லாதபோது, சந்தேக நபர் அவரை கழிப்பறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இரண்டு மணி நேரம் என்ன செய்தார்கள் என்பதற்கு எந்த விளக்கமும் இல்லை. இருவரும் கைது செய்யப்பட்டனர். இருவரும் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். இதன் மூலம் சோனாலி போகட் போதையில் இறந்ததாக தெரிகிறது என்று தெரிவித்தார். இதனிடையே சோனாலி போகட் இறப்பதற்கு முன் எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் சோனாலி போகட்டின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. சோனாலி போகத் தடுமாறி நடக்கிறார். அவருடைய ஊழியர் சுதிர் அவரை பிடித்து அழைத்துச் செல்கிறார். அவர் நடக்கக்கூடிய நிலையில் இல்லை என்பது சிசிடிவியில் தெளிவாகத் தெரிகிறது. ஊழியர்களின் உதவியுடன் சில படிகள் நடந்த பிறகு, சோனாலி போகத் படிக்கட்டில் அமர்ந்தார்.

Video में लड़खड़ाकर चलते दिख रहीं सोनाली फोगाट... मौत से पहले का देखें ये CCTV फुटेज pic.twitter.com/UoamyiSjVU

— Deepak Pandey (@deepakpandeynn)
click me!