
ஏழை விவசாயியின் 22 வயது மகன் ஒருவருக்கு அமெரிக்க நிறுவனமான ஊபரில் 2 கோடி ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் கோத்வாரை (Kotdwar) சேர்ந்த ஏழை விவசாயியின் மகன் ரோகித் நெகி. இவர் சி.பி.எஸ்.இ பள்ளி படிப்பை 80 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றவர். மென்பொருள் பொறியியலை தேர்வு செய்து பட்டப்படிப்பை முடித்த பின் 20ஆயிரம் ஊதியத்துக்கு பணியாற்றி வருகிறார். ஆனால் அவர் அதில் மன நிறைவு அடையவில்லை. இதை அடுத்து ரோகித், ஐஐடியில் எம்.டெக் பிரிவில் பட்டம் பயில ஆசைப்பட்டு நுழைவு தேர்வு எழுதினார். அதில் அவருக்கு தொடர் தோல்விகள் ஏற்பட்டது. இருந்த போதிலும் விடா முயற்சியில் இறங்கிய அவர், தேசிய அளவில் நடைப்பெறும் கேட் நுழைவுத்தேர்வில் இந்திய அளவில் 202 வது இடத்தை பிடித்தார். இதன் மூலம் அசாமில் உள்ள குவாஹத்தி ஐஐடி நிறுவனத்தில் இடம் கிடைத்தது. தற்போது இறுதி ஆண்டு படித்து வரும் அவர் campus interview மூலம் அமெரிக்காவின் முன்னனி டாக்ஸி நிறுவனமான ஊபரில் பணி புரிய தேர்வாகியுள்ளார்.
ஆண்டுக்கு 2 கோடியே 50ஆயிரம் அவருக்கு சம்பளமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதம் 10ஆயிரம் சம்பாதிக்கவே கஷ்டப்படும் ஏழை விவசாயி குடும்பத்தில் பிறந்து, தற்போது 2 கோடி சம்பளத்தில் வேலை கிடைத்திருப்பது அளவு கடந்த உற்சாகத்தை அளிப்பதாக ரோகித் நெகி தெரிவித்துள்ளார். ரோஹித் நேகி என்னும் இளைஞர் தற்போது கவுகாத்தி ஐஐடியில் இரண்டாம் ஆண்டு எம்டெக் மாணவராக உள்ளார். இந்நிலையில் படித்துக்கொண்டிருக்கும்போதே உபெர் நிறுவனத்திடமிருந்து மாபெரும் சலுகையைப் பெற்றுள்ளார். உத்தரகாண்டின் கோட்வாரைச் சேர்ந்த 22 வயது இளைஞன் உபெர் நிறுவனத்திடமிருந்து ரூ.2.05 கோடி சம்பளத்திற்கான வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
அவர் முதுகலைப் படிப்பை முடித்த பிறகு உபெர் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராகப் பணிபுரிவார் என்று கூறப்படுகிறது. அவரது அடிப்படை சம்பளம் ரூ.96 லட்சமாகவும், சிடிசி ரூ.2.05 கோடியாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கேட்டப்பதற்கு எளிதாக இருந்தாலும், விவசாயியின் மகனான ரோஹித்துக்கு இது போன்ற வேலை எளிதாக கிடைக்கவில்லை, அவனது பெற்றோர்கள் தங்கள் மகனுக்குத் தங்களால் இயன்ற எல்லாவற்றையும் கொடுக்க முயன்றனர், இதனால் அவன் அடையவும் அவனது கனவுகளை நிறைவேற்றவும் முடிந்தது. இதுக்குறித்து பேசிய அவர், நான் கீழ் நடுத்தரக் குடும்பத்தில் இருந்து வந்தவன். எனது குடும்பத்தின் மாதச் செலவு 10,000 ரூபாய்க்கும் குறைவு. என் தந்தை ஒரு விவசாயி, என் அம்மா ஒரு இல்லத்தரசி. என் சகோதரி ஒரு செவிலியர். 2.05 கோடி ரூபாய் பேக்கேஜ் என்பது எனது குடும்பத்திற்கு ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியான உணர்வு என்று தெரிவித்துள்ளார்.