சூரியனில் உருவாகியுள்ள மிகப்பெரிய அளவிலான சூரியகாந்த புயல் இன்று பூமியைக் தாக்கும் என்று வானிலை அறிஞர்கள் எச்சரி்த்துள்ளனர்.
சூரியனில் உருவாகியுள்ள மிகப்பெரிய அளவிலான சூரியகாந்த புயல் இன்று பூமியைக் தாக்கும் என்று வானிலை அறிஞர்கள் எச்சரி்த்துள்ளனர்.
நாசா விண்வெளி மையத்திடம் இருந்து தகவல் பெற்று ஸ்பேஸ்வெதர்.காம் என்ற தளத்தி்ன் அறிவியல் வல்லுநர்கள் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ பாம்பு போன்ற உருவத்துடன் மிகப்பெரிய உருவத்தில் சூரியகாந்தப் புயல் 19ம் தேதி பூமியைத் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
உடைந்தது சிவசேனா ; ஷிண்டே ஆதரவு எம்.பி.க்கள் தனிக்குழு: சின்னத்துக்கு போராடத் தயார்: ராவத்
நாசாவும் இந்தத் தகவலை உறுதிப்படுத்தி, 19ம் தேதி சூரியனிலிருந்து வெளிப்படும் மிக்பபெரிய காந்தப்புயல் பூமியைத் தாக்கும் எனத் தெரிவித்துள்ளது. சூரியப் புயல் அதிவேகத்தில், அதிகமான வெப்பத்திலும், காந்த அலைகளுடன் வந்து தாக்கும் போது, அதிகமான கதிர்வீச்சும், காந்த சக்தியும் வெளிப்படும் எனத் தெரிவி்த்துள்ளது.
Direct Hit! A snake-like filament launched as a big while in the Earth-strike zone. NASA predicts impact early July 19. Strong shows possible with this one, deep into mid-latitudes. Amateur & users expect signal disruptions on Earth's nightside. pic.twitter.com/7FHgS63xiU
— Dr. Tamitha Skov (@TamithaSkov)விண்வெளி ஆய்வாளர் டாக்டர் தமிதா ஸ்கோவ் ட்விட்டரில் பதிவிட்ட வீடியோ மற்றும் கருத்தில் “ ஜூலை 19ம் தேதி சூரியகாந்தப் புயல் பூமியை நேரடியாகத் தாக்கும். பாம்பு போன்று வளைந்து மிகப்பெரிய உருவத்தில் வரும்சூரியகாந்தப் புயல் பூமியை நேரடியாகத் தாக்கும்.
19ம் தேதி சூரியகாந்தப் புயல் பூமியை தாக்கும் என நாசா கணித்துள்ளது. சூரியனிலிருந்து வெளிப்படும் கதிர்கள் மிகுந்த வெளிச்சத்துடன், வலிமையுடன் பூமியை வந்தடையும். இதனால் பூமியில் ரேடியோ சிக்னல், ஜிபிஎஸ் போன்றவற்றின் சேவை பாதிப்படையும்”
“ இந்த சூரிய காந்தப் புயல் அதிகமான பிளாஸ்மாவின் வெளியேற்றத்தினாலும், காந்த சக்தியினாலும் உருவாவதாகும். இது ஜூலை15ம் தேதியே சூரியனில் உருவாகிவிட்டது, அதிக சக்தி பெற்று, ஜூலை 19ம் தேதி பூமியைத் தாக்கும் சூரிய காந்த கதிர்கள், ஜி2 அல்லது ஜி3 வகையைச் சேர்ந்தவை” இவ்வாறு தமிதா தெரிவித்துள்ளார்.
பொதுவாக சூரியனிலிருந்து வெளிப்படும் சூரிய காந்தப் புயல்களை ஜி என்ற அளவீட்டில் குறிக்கப்படுகிறது. அதாவது, ஜி1 என்பது லேசான சூரிய காந்தப்புயல், ஜி5 என்று தீவிரமான சூரியகாந்தப்புயலாகும். தற்போது பூமியைத் தாக்கும் சூரியகாந்தப் புயல் ஜி2 அல்லது ஜி3 வகையைச் சேர்ந்தவை.
The long snake-like filament cartwheeled its way off the in a stunning ballet. The magnetic orientation of this Earth-directed is going to tough to predict. G2-level (possibly G3) conditions may occur if the magnetic field of this storm is oriented southward! pic.twitter.com/SNAZGMmqzi
— Dr. Tamitha Skov (@TamithaSkov)பூமியில் என்ன பாதிப்பு ஏற்படும்?
செவ்வாய் கிரகத்தில் நூடுல்ஸ் போன்ற பொருள்; நாசா விஞ்ஞானிகள் ஆச்சரியம்!!
சூரியகாந்தப் புயல் பூமியை இன்று தாக்கும்போது, பூமியில் உள்ள, வானிலிருந்து பூமிக்குச் செல்லும் ரேடியோ சிக்னலில் பாதிப்பு ஏற்படலாம், ஜிபிஎஸ் சிக்னலும் பாதிக்கப்படலாம். ஜிபிஎஸ் சிக்னல் பாதிக்கப்பட்டால், விமானங்கள் இயக்குவது பாதிக்கப்படும், வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியைப் பயன்படுத்தி செல்வோருக்கும், கூகுள்ஜிபிஎஸ் போன்றவற்றின் சேவையும் பாதிக்கப்படும்.