Snake Venom Addiction : மது பார்ட்டியில், பாம்பின் விஷத்தால் செய்யப்பட்ட மதுவை வழங்கிய வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் பிக் பாஸ் பிரபலம்.
ஹிந்தியில் OTTயில் மட்டும் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றிபெற்றவர் தான் எல்விஷ். பாம்பு விஷம் கலந்த ரேவ் பார்ட்டி வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை அன்று 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் பார்ட்டிகளில் பாம்பு விஷத்தை ஏற்பாடு செய்ததற்காக வனவிலங்கு சட்டத்தின் கீழும் அவரிடம் விசாரணை நடக்கவுள்ளது.
26 வயதான பிரபல யூடியூபரான அவர், இந்த வழக்கில் எந்த தொடர்பும் தனக்கு இல்லை என்று முதலில் மறுத்துள்ளார், ஆனால் இப்போது பார்ட்டிகளில் பாம்பு விஷத்தை ஏற்பாடு செய்ததாக அவர் ஒப்புக்கொண்டதாக போலீஸ் வட்டாரங்கள் தகவல் அளித்துள்ளன.
5 இல்ல.. குனோ தேசிய பூங்காவில் காமினி சிறுத்தைக்கு பிறந்தது 6 குட்டிகள்.. மத்திய அமைச்சர் தகவல்..
வழக்கு என்ன?
கடந்த ஆண்டு நொய்டாவில் நடந்த பார்ட்டிகளில் பாம்பு விஷத்தை பொழுதுபோக்கிற்காக பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கு தான் இது. கைதான யாதவ் தனது பார்ட்டிகளில் பாம்பு விஷத்தை ஏற்பாடு செய்ததாகவும், மேலும் தனது YouTube வீடியோ படப்பிடிப்பில், பாம்புகளைப் பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
நொய்டா செக்டார் 51ல் உள்ள ஒரு விருந்து கூடத்தில் சோதனை நடத்திய பின்னர், கடந்த ஆண்டு நவம்பரில் பாம்பு கடத்தல் கும்பலை போலீசார் முற்றிலும் முறியடித்தனர். பாம்பு விஷம் வழங்கியதற்காக நான்கு பாம்பாட்டிகளையும் போலீசார் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து நாகப்பாம்பு, உள்ளிட்ட ஒன்பது பாம்புகளும் மீட்கப்பட்டன. பின் அங்கு நடத்தப்பட்ட சோதனையில் பாம்பின் விஷம் மதுவில் கலந்திருப்பது தெரியவந்தது.
பிரபல சாணக்யா ஆமை 125வது வயதில் உயிரிழப்பு.. சோகத்தில் உயிரியல் பூங்கா ஊழியர்கள்..