Encounter Specialist : டெல்லியில், ஆள் யாரென்று தெரியாமல் ஜாக்கிங் சென்றுகொண்டிருந்த நபரிடம் துப்பாக்கியை காட்டி இருவர் திருட முயன்றுள்ளனர்.
தலைநகர் டெல்லியில் உள்ள சாணக்யபுரி பகுதியில் உள்ள நேரு பூங்காவில் கடந்த சனிக்கிழமை மாலை உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த ஒருவரை குறிவைத்து செயின் பறிப்பு செய்ய முயன்ற இருவரை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அந்த கொள்ளையர்கள் கைத்துப்பாக்கியை எடுத்து, தங்கச் சங்கிலியைக் கொடுக்காவிட்டால் துப்பாக்கியால் சுடப் போவதாக மிரட்டியுள்ளனர்.
பின்னர் அவரிடம் இருந்து செயினை பறித்துக்கொண்டு பூங்காவின் வாசலை நோக்கி ஓடியுள்ளார்கள். ஆனால் அவர்கள் செயினை பறித்து சென்றது, டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவில் "என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்" வினோத் படோலா தான் என்பது அவர்களுக்குத் தெரியாது. திரு. படோலா இரண்டு கொள்ளையர்களையும் துரத்தியுள்ளார்.
undefined
12த் பெயில் பட புகழ் ஐபிஎஸ் அதிகாரி மனோஜ் சர்மாவுக்கு கிடைத்த அங்கீகாரம்.. குவியும் வாழ்த்துக்கள்..!
பின் துப்பாக்கியுடன் இருந்த ஒருவரை பிடித்து அவரை நிராயுதபாணியாக்கியுள்ளார். இரண்டாவது குற்றவாளி முதலில் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். உடனே படோலா 112ஐ அழைத்து PCRக்கு தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து உள்ளூர் போலீசாரின் உதவியுடன் அந்த இரண்டாவது குற்றவாளியை தேடியுள்ளார்.
பின்னர் அருகிலேயே ஒரு இடத்தில் ஒளிந்திருந்த அந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். டிசிபி (புது டெல்லி) தேவேஷ் மஹ்லா கூறுகையில், இரண்டு கொள்ளையர்கள் கௌரவ் மற்றும் பவன் தேவ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர், இருவரும் மரணத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் கொள்ளையடித்ததற்காக பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்து ரோந்து பணியை தீவிரப்படுத்தினர் என்றார்.
யார் இந்த வினோத் படோலா?
வினோத் படோலா பல உயர்மட்ட பணிகளுக்கு தலைமை தாங்கியுள்ளார். கடந்த அக்டோபர் 2013ல், அவரும் அவரது குழுவும் குண்டர்கள் நிது தபோடியாவை கண்டுபிடித்து, தெற்கு டெல்லியின் வசந்த் குஞ்சில் உள்ள ஒரு ஹோட்டல் அருகே என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். அதன் பிறகு, திரு படோலா மற்ற பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் பங்கேற்றார், அதில் ஒன்றில் அவர் சிறப்பாக செயல்பட்டதை அடுத்து மத்திய உள்துறை அமைச்சரின் சிறப்பு நடவடிக்கை பதக்கம் வழங்கப்பட்டது.
5 இல்ல.. குனோ தேசிய பூங்காவில் காமினி சிறுத்தைக்கு பிறந்தது 6 குட்டிகள்.. மத்திய அமைச்சர் தகவல்..