வெயில் கொடுமை தாங்காமல் பிரிட்ஜில் படுத்த 4 அடி பாம்பு…வீட்டு உரிமையாளர் அலறி அடித்து ஓட்டம்

 |  First Published Apr 14, 2017, 9:35 PM IST
snake in fridge


நாளுக்கு நாள் கொளுத்திவரும் வெயிலுக்கு நாம் ஏ.சி.யில் குளிர்ச்சியாக இருந்தால் போதுமா?, நானும் குளிர்ச்சியா இருப்பேன் என்ற ரீதியில் 4 அடி பாம்பு ஒன்றுபிரிட்ஜில் சென்று படுத்துக்கொண்டது. இதைப் பார்த்த வீட்டு உரிமையாளர் அலறி அடித்து ஓடினார்.

4 அடிநீள பாம்பு

தெலங்கானா மாநிலம், சிர்சிலா நகர், சஞ்சீவ் நகரில் ஒரு வீட்டில் உள்ள ஒரு பெண் கடந்த செவ்வாய்கிழமை காலையில் வழக்கம் போல் பிரிட்ஜில் இருக்கும் பொருட்களை எடுக்க கதவைத் திறந்தார். அப்போது பிரிட்ஜுக்குள் பார்த்தபோது, 4 அடி பாம்பு  ஒன்று சுருண்டு படுத்து இருந்தது கண்டு அலறியடித்து வெளியே ஓடிவந்து, அக்கம் பக்கத்து வீட்டாளர்களிடம் தெரிவித்தார்.

Latest Videos

பாம்பை பிடித்தனர்

இதையடுத்து, ஐதராபாத்தில் உள்ள பாம்புகள் பிடிக்கும் தனியார் தொண்டு நிறுவனத்துக்கு அந்த வீட்டு உரிமையாளர் தகவல் அளித்தார். இதையடுத்து, அங்கு வந்த பாம்பு பிடிக்கும் இளைஞர்கள் அந்த பாம்பை லாவகமாகப் பிடித்து கொண்டு சென்றனர்.

38டிகிரி வெயில்

இது குறித்து பாம்பு பிடித்தை அவினாஷ் என்ற இளைஞர் கூறுகையில், “ பிரிட்ஜில்இருந்த பாம்பு கொடிய விஷம் உள்ள பாம்பு இல்லை. வீட்டில் உள்ளவர்கள்பிரிட்ஜை திறந்து வைத்து இருக்கும்போது அந்த பாம்பு உள்ளே சென்று இருக்க வேண்டும். தற்போது தெலங்கானாவில் தினமும் 38 டிகிரி வெயில் கொளுத்தி வருகிறது. இதை மனிதர்களே தாங்க முடியவில்லை.

பாம்பு போன்ற உயிரினங்கள் தொடர்ந்து வெயிலில் இருந்தால், இறந்துவிடும். அதனால், இதுபோன்ற நேரத்தில் குளிர்ந்த இடம் நோக்கி நகரும். அதனால், அந்த பாம்பு பிரிட்ஜில் வந்து மறைந்துள்ளது. ஒருவேளை இன்னும் சில மணி நேரங்கள் தொடர்ந்து அந்த பாம்பு பிரிட்ஜில் இருந்து இருந்தால், பாம்பு இறந்துபோயிருக்கும் ’’ என்று தெரிவித்தார்.

 

 

 

 

tags
click me!