டீன் ஏஜ் பெண்கள் புகைபிடிக்கும் பழக்கம் இருமடங்குக்கு மேல் உயர்வு! என்ன காரணம்?

By SG Balan  |  First Published May 29, 2024, 11:47 AM IST

வயதான பெண்களிடையே புகைபிடித்தல் குறைந்துவிட்டாலும், இளம் பருவத்தினரிடையே அதிகரித்து வரும் புகை பழக்கம் கவலையளிக்கும் வகையில் உள்ளது.


இந்தியாவில் ஒட்டுமொத்த புகையிலை நுகர்வு குறைந்துள்ளதாகக் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய இந்திய புகையிலை கட்டுப்பாட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், டீன் ஏஜ் பெண்கள் புகைபிடிப்பது இரண்டு மடங்குக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.

வயதான பெண்களிடையே புகைபிடித்தல் குறைந்துவிட்டாலும், இளம் பருவத்தினரிடையே அதிகரித்து வரும் புகை பழக்கம் கவலையளிக்கும் வகையில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இளம் பருவத்தினரிடையே புகைபிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. ஆனால் இந்த அதிகரிப்பு பெண் குழந்தைகளிடம் மிக அதிகமாக உள்ளது என்று அறிக்கை கூறுகிறது.

Latest Videos

undefined

2009 முதல் 2019 வரை டீன் ஏஜ் பெண்கள் புகைபிடித்தல் 3.8 சதவீதத்தில் இருந்து 6.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஒப்பீட்டளவில், இளம்பெண்களிடம் புகைபிடித்தல் பழக்கம் 2.3 சதவீதம் அதிகரித்துள்ளது. பெரியவர்களிடையே புகைபிடிக்கும் பழக்கம் குறைந்துள்ளது. ஆண்களில் 2.2 சதவீதமும் பெண்களில் 0.4 சதவீதமும் குறைந்துள்ளது. இளம்பெண்கள் புகைப்பிடிக்கும் பழக்கம் 2017ல் 1.5 சதவீதமாக இருந்து, 2019ல் 6.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது அடுத்த தலைமுறை புகைக்கு அடிமையாகி வருவதைக் காட்டுகிறது.

பெண் வேடமிட்டு திருமணம் செய்துகொண்ட ஆண்! 12வது நாளில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

பெண்களிடம் புகைபிடிக்கும் பழக்கம் அதிகரிப்பது ஏன்?

டீன் ஏஜ் பெண்கள் அதிகமாக புகைபிடிப்பதற்கு அவர்கள் வேகமாக முதிர்ச்சியடைவதும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. மேலும், இளைஞர்களைப் போலவே, கோபத்திலிருந்து விடுபடவும் மன அழுத்தைக் குறைத்துக்கொள்வும் சிகரெட்டுகளை நாடுகிறார்கள். சிலர் நண்பர்களின் வற்புறுத்தலுக்கு அடிபணிந்தும், சிலர் தங்கள் பசியின்மையைப் போக்கவும் புகைப்பிடித்தலை ஒரு தீர்வாகப் பார்க்கிறார்கள்.

"பெண்கள் புகைபிடிப்பதை நாகரிகமாகவும், அதிகாரத்தின் அடையாளமாகவும் கருதுகின்றனர். திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் புகைபிடிப்பதை சித்தரிப்பது இதற்கு ஒரு முக்கியக் காரணம். 2012ல் திரையில் புகைபிடிக்கும் காட்சிகள் தோன்றும்போது எச்சரிக்கை செய்தி இடம்பெற வேண்டும் என்ற கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்பட்டதால், புகைபிடிப்பது போன்ற காட்சிகள் குறைந்துள்ளன. ஆனால், OTT தளங்களில், எச்சரிக்கை இல்லாமல் புகைபிடிக்கும் காட்சிகள் வருகின்றன. இதுவும் பெண்கள் புகைபிடிப்பது அதிகரிக்கக் காரணம்" என்று அறிக்கையின் ஆசிரியர்களில் ஒருவரும், பப்ளிக் ஹெல்த் ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியாவின் (PHFI) பொது சுகாதார விஞ்ஞானியுமான பேராசிரியர் மோனிகா அரோரா கூறுகிறார்.

"இ-சிகரெட்டுகள் பாதுகாப்பானவை என்று பிரச்சாரம் செய்யும் போக்கு கவலை அளிக்கிறது. இவை ஆன்லைனிலும் சந்தையிலும் எளிதாகக் கிடைக்கின்றன. அவர்கள் வாங்குபவரின் வயதைச் சரிபார்க்காமல், சட்டவிரோதமாக விற்கப்படுகின்றன” என்றும் மோனிகா சுட்டிக்காட்டுகிறார்.

எங்கள் சிங்கம்! நெல்லையில் சண்டைச் சேவல் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி பேனர்!

புகைபிடிப்பதால் பெண்களுக்கு ஏற்படும் பின்விளைவுகள்:

புகைபிடித்தல் சுவாச நோய்கள், நுரையீரல் புற்றுநோய், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் குழந்தை பிறப்பது தொடர்பான பிரச்சினையை ஏற்படுத்தலாம். நீண்ட கால பாதிப்புகளும் உண்டு. புகைபிடிக்காத பெண்களுடன் ஒப்பிடுகையில், புகைபிடிக்கும் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் 43 சதவீதம் அதிகமாக இருப்பதாக ஒரு ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. அமெரிக்கன் காலேஜ் ஆஃப் கார்டியாலஜி ஜர்னலில் 2019ஆம் ஆண்டு வெளியான ஆய்வறிக்கையின்படி, புகைபிடிக்கும் 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட வகை மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம் எனச் சொல்கிறது.

இளம் பருவத்தினரிடையே புகைபிடிக்கும் பழக்கத்தில் உள்ள வேறுபாடு குறைந்து வருகிறது. 2019ஆம் ஆண்டில், 7.4 சதவீத இளம்பெண்கள், 9.4 சதவீத இளைஞர்கள் புகைப்பழக்கம் கொண்டிருந்தனர். இனி வரப்போகும் தலைமுறையின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு புகைபிடித்தலின் அபாயங்களை எடுத்துக்கூறும் விளம்பரங்களையும் பிரச்சாரத்தையும் அதிகரிக்க வேண்டும் என்றும் இந்த ஆய்வு பரிந்துரைக்கிறது.

20 வருட உத்தரவாதம்! AI தொழில்நுட்பத்தில் இயங்கும் இன்வெர்ட்டர் கம்ப்ரஸருடன் அதிநவீன பிரிட்ஜ்!

click me!