smart electricity meters procurement Scam : ஸ்மார்ட் மின் மீட்டர்: ஸ்மார்ட் மின் மீட்டர் வாங்குவதற்கான ₹7500 கோடி ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக கர்நாடகாவில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Smart Electricity Meter Procurement Scam : ஸ்மார்ட் மின் மீட்டர் வாங்குவதற்கான ₹7500 கோடி ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக கர்நாடகாவில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாஜக எம்எல்ஏ சி.என். அஸ்வத் நாராயண் வியாழக்கிழமை நேற்று ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரியும், முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஒரு குழு அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இது சட்டமன்றத்தில் புயலைக் கிளப்பியது. மாநில பட்ஜெட் மீதான விவாதத்தின்போது இந்த விஷயத்தை எழுப்பிய பாஜக எம்.எல்.ஏ அஸ்வத் நாராயண், சுமார் 39 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் குறைபாடுகள் இருப்பதாக குற்றம் சாட்டினார்.
கர்நாடகாவில் நாளை பந்த்! பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கும் அபாயம்?
உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக வாங்குவதற்கு பதிலாக, விநியோகஸ்தருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதால் ஸ்மார்ட் மீட்டர்களின் விலை அதிகரித்ததாக பாஜக எம்எல்ஏ கூறினார். மேலும், ஸ்மார்ட் மீட்டர்களுக்கான மென்பொருள் பெறப்பட்ட நிறுவனம் ஏற்கனவே கறுப்புப் பட்டியலில் இருந்தது. கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் (KERC) வழிகாட்டுதல்களின்படி தற்காலிக மின் இணைப்பு மற்றும் புதிய இணைப்பு கோருபவர்களுக்கு பெஸ்காம் ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவுவது கட்டாயமாக்கியுள்ளது, ஆனால் தற்காலிக இணைப்புகளுக்கு மட்டுமே ஸ்மார்ட் மீட்டர்கள் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று அவர் குற்றம் சாட்டினார்.
Kerala Lottery Result: ரூ.70 லட்சத்தை தட்டித்தூக்கிய அதிர்ஷ்டசாலி யார்? முழு ரிசல்ட்!
மத்திய மின்சார ஆணையத்தின் வழிகாட்டுதல்களில் ஸ்மார்ட் மீட்டர்கள் தற்காலிக இணைப்புகளுக்கு மட்டுமே கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது என்றும், ஆனால் அனைத்து மீட்டர்களும் ஸ்மார்ட் மீட்டர்களால் மாற்றப்படும்போது புதிய இணைப்புகளுக்கு இது கட்டாயமாக்கப்படலாம் என்றும் பாஜக எம்எல்ஏ வாதிட்டார். கர்நாடக எரிசக்தி அமைச்சர் கே.ஜே. ஜார்ஜ் சில நாட்களுக்கு முன்பு ஒரு நோட்டீஸூக்கு அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவுவது தற்காலிக இணைப்புகளுக்கு மட்டுமே கட்டாயமானது என்றும் புதிய இணைப்புகளுக்கு இது விருப்பமானது என்றும் கூறியிருந்தார்.
டிராபிக் ரூல்ஸ் மீறினால் அவ்வளவு தான்.! 1000 ரூபாய் அபராதம் இனி ரூ.5000 -கிடு கிடுவென உயர்வு
பாஜக எம்எல்ஏவின் எதிர்ப்புக்கு பதிலளித்த ஜார்ஜ், இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார். மென்பொருள் நிறுவனம் உண்மையில் கறுப்புப் பட்டியலில் இருந்தால் ஒப்பந்தத்தை ரத்து செய்யவும் தயாராக இருப்பதாக அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.