கர்நாடகாவில் நாளை பந்த்! பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கும் அபாயம்?

பெலகாவி சம்பவம் எதிரொலியாக கர்நாடகாவில் நாளை பந்த் நடைபெற உள்ளது. இதனால் பேருந்து சேவைகள் பாதிக்கப்படலாம், கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Karnataka Bandh Tomorrow tvk

கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெலகாவி மாவட்டத்தில் மராத்தி பேச தெரியாது எனக்கூறிய கேஎஸ்ஆர்டிசி நடத்துநர் மீது கடந்த பிப்ரவரி மாதம் மராத்தி மொழி ஆதரவாளர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து இரு மாநிலங்களுக்கு இடையே இயக்கப்பட்ட பேருந்து சில நாட்கள் நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்திற்கு கன்னட மொழி ஆதரவாளர்கள்  கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் கன்னட ஒக்கூடா என்ற அமைப்பினர் கர்நாடகாவில் நாளை காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணி வரை பந்த்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இந்த பந்த்துக்கு பல்வேறு கன்னட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் பொது போக்குவரத்து இயங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் நாளை பந்த் நடைபெறும் நிலையில் நாளை எவையெல்லாம் இயங்கும் என்பதை பார்ப்போம். 

Latest Videos

இதையும் படிங்க: Kerala Lottery Result: ரூ.70 லட்சத்தை தட்டித்தூக்கிய அதிர்ஷ்டசாலி யார்? முழு ரிசல்ட்!

முழு அடைப்புக்கு சில தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால் பிஎம்டிசி மற்றும் கேஎஸ்ஆர்டிசி பேருந்து சேவைகள் பாதிக்கப்படலாம். சூழ்நிலையைப் பொறுத்து சில பேருந்துகள் இயக்கப்படாமல். மேலும் தனியார் வாடகை கார் மற்றும் ஆட்டோ ஆகியவைகள் இயங்காது. பல கல்வி நிறுவனங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அறிவித்துள்ளன.

மருத்துவமனைகள், அவசர ஆம்புலன்ஸ் சேவைகள், மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை சேவைகள் இயங்கும். பந்தால் பொதுமக்கள் அவசர மருத்துவ உதவிகளை பெற முடியாமல் போகக் கூடாது என்பதால், மருத்துவமனைகள் வழக்கம்போல் இயங்கும். ஆம்புலன்ஸ், மருத்துவ ஊழியர்கள், ஊரக சுகாதார மையங்கள் வழக்கம்போல் செயல்படும். பெரும்பாலான உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள் மூடப்படும். சில திரையரங்குகள் பந்திற்கு ஆதரவளிக்கின்றன. அரசு அலுவலகம் செயல்பட்டாலும் குறைந்த பணியாளர்கள் கொண்டு இயங்கும். 

இதையும் படிங்க:  டிராபிக் ரூல்ஸ் மீறினால் அவ்வளவு தான்.! 1000 ரூபாய் அபராதம் இனி ரூ.5000 -கிடு கிடுவென உயர்வு

மெட்ரோ வழக்கம் போல் இயங்கும். இருப்பினும், மெட்ரோ ஸ்டேஷனில் இருந்து வீடுகளுக்கு செல்ல ஆட்டோ மற்றும் டாக்சி சேவைகள் கிடைப்பதில் சிக்கல் நிலவக்கூடும். அத்தியாவசிய பொருட்களாக பால், பெட்ரோல் உள்ளிட்ட பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும். 

vuukle one pixel image
click me!