
Bengaluru skeletons discovery : நாளுக்கு நாள் மர்மங்கள் நிறைந்த பல தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வரும். அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக நொய்டாவில் ஒரு வீட்டின் அருகே கழிவு நீர் கால்வாயில் இருந்து பல மனித எலும்பு கூடுதல் கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து சைகோ மனிதனை போலீசார் கைது செய்தனர். அடுத்தாக கேரளாவில் மாந்தீரிகம் என்ற பெயரில் கொலை செய்து உடல் உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட சம்பவமும் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பெங்களூரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கீழ் பகுதியில் எலும்பு கூடு கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் உள்ள எம்.என். கிரெடென்ஸ் ஃப்ளோரா அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அங்கு தொடர்ந்து கழிவு நீர் செல்லும் பகுதியில் அடைப்பு ஏற்பட்டதையடுத்து கழிப்பறையை சுத்தம் செய்யும் போது தொழிலாளர்கள் மண்டை ஓடு மற்றும் எலும்புக்கூடுகள் போன்றவைகள் ஒன்றன் பின் ஒன்றாக கண்டறிந்தனர்.
இதனையடுத்து தொழிலாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்களிடையே அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக குடியிருப்பாளர்கள் நலச் சங்கத்தின் தலைவரிடம் தகவல் தெரிவித்தனர். பின்னர், அவர் சம்பவத்தை பேகூர் காவல்துறைக்கு தெரிவித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். எலும்பு கூடுகள் எத்தனை வருடங்களுக்கு முந்தையது.? யாராவது கொலை செய்து புதைத்திருப்பார்களா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளுத. அதே நேரம் கண்டெடுக்கப்பட்ட எலும்புகள் மற்றும் மண்டை ஓடு போன்றவை மனிதனுடையதா அல்லது விலங்கினுடையதா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் மனித எலும்பாக இருக்கலாம் எனக் தெரிவித்தனர். இருந்த போதும் இதை உறுதிப்படுத்த காவல்துறை தடயவியல் ஆய்வகத்திற்கு மாதிரிகளை அனுப்பியுள்ளனர்.
மேலும் அதன் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 15 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த கட்டடம் அமைந்த இடத்தின் அருகே ஒரு பழைய மயானம் இருந்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர். இதன் காரணமாகவே மனித எலும்பு கூடுகள் கிடைத்திருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மர்ம சூழ்நிலையில் காவல்துறையின் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடந்த பல ஆண்டுகளாக மழைநீர் வடிகால்களில் சீரான பராமரிப்பு இல்லாத காரணத்தால் குடியிருப்பாளர்கள் சுத்தம் செய்ய வேண்டுகோள் வைத்தனர். இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட தூய்மை பணியின் போது இந்த இந்த எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த குடியிருப்பு வளாகத்தில் 16 கழிவு நீர் குழிகள் கொண்ட இடத்தில் ஒரு குழியில்தான் இத்தகைய எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எனவே போலீசாரின் விசாரணை தொடரும் நிலையில், எலும்பு கூடுதல் தொடர்பாக அதிகாரப்பூர்வ ஆய்வறிக்கை வெளியான பிறகு மட்டும் முழுமையான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.