Parliament Sine Die: நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் முடிந்தது:இரு அவைகளும் முன்கூட்டியே முடிந்தது

By Pothy RajFirst Published Dec 23, 2022, 2:14 PM IST
Highlights

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்றுமுடன் முடிந்தது. மக்களவை, மாநிலங்களவை இரு அவைகளும் 6 நாட்களுக்கு முன்பே தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டன.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்றுமுடன் முடிந்தது. மக்களவை, மாநிலங்களவை இரு அவைகளும் 6 நாட்களுக்கு முன்பே தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டன.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த 7ம் தேதி தொடங்கியது, வரும் 29ம் தேதிவரை நடத்தப்பட திட்டமிடப்பட்டது. ஆனால், 23ம் தேதியே முடிக்கப்பட்டது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வருவதால், கூட்டத்தை முன்கூட்டியே முடிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல தலைவர்கள், மக்களவைச் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கோரிக்கை வைத்தனர். 

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் திமுக எம்.பி. கனிமொழி பங்கேற்பு

இதையடுத்து நேற்று முன்தினம் மக்களவை அலுவல்ஆலோசனைக் குழு தலைவர் ஓம் பிர்லா தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில்கூட்டத் தொடர் முன்கூட்டியே முடிக்கப்பட முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து, 6 நாட்களுக்கு முன்பாக இன்றே கூட்டம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து, அடுத்ததாக பட்ஜெட் கூட்டத்தொடருக்காக நாடாளுமன்ற இரு அவைகளும் ஜனவரிமாதம் கூட்டப்படும். அப்போது இருஅவைகளைகளைம் இணைத்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றுவார். அதைத்தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கை தாக்கப்பட்டு, பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கலாகும் எனத் தெரிகிறது

இவுங்க அவுங்க இல்லீங்க! இந்திய போர் விமானப்படையின் முதல் முஸ்லிம் பெண் பைலட் சானியா மிர்சா

இந்த குளிர்காலக் கூட்டத்தொடரில் மக்களவையின் ஆக்கப்பூர்வமான செயல்பாட்டு நேரம் 97 சதவீதமாகும், அதாவது 13 அமர்வுகளில் 62 மணிநேரம் 42 நிமிடங்கள் அவை நடத்தப்பட்டுள்ளது

அருணாச்சலப்பிரதேச சீன எல்லையான தவாங் பகுதியில் கடந்த 9ம் தேதி இந்திய வீரர்களுக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த விவகாரத்தை அவையில் எழுப்பி விவாதிக்க எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரினர்.

ஆனால், அதற்கு அனுமதி மறுத்த மத்திய அரசு, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மட்டும் இரு அவைகளிலும் விளக்கம் அளித்தார். இதனால் கடந்த வாரம் முழுவதும் இந்த விவகாரத்தில் அவையில் கடும் அமளி நிலவியது.

சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவாமல் தடுக்க என்ன விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, அ ரசு எவ்வாறு தயாராகியுள்ளது என்பது குறித்து இன்று இருஅவைகளிலும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா விளக்கம் அளித்தார்.
மக்களவை, மாநிலங்களவைத் தலைவர்கள் கேட்டுக்கொண்டதற்கினங்க இன்று அவையில் அனைத்து எம்.பி.க்களும் முகக்கவசம் அணிந்து பங்கேற்றனர். 

வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கான கொரோனா தடுப்பு விதிகளை வெளியிட்டது மத்திய அரசு

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கொரோனா பரவல் நேரத்தில் பாரத் ஜோடோ யாத்திரை நடத்துவதற்கு பாஜக எம்.பிக்கள் ஆட்சேம் தெரிவித்தனர். அப்போது பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் “ பாரத் ஜோடோ யாத்திரை கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகச் செல்கிறது. உலகம் மீண்டும் கொரோனா பிடியில் சிக்க இருக்கிறது, அதிலிருந்து மீளவும், சிக்காமல் இருக்கவும் மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. ஏன் காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது, விதிமுறைகள் அனைவருக்கும் ஒரேமாதிரித்தான்”எ னத் தெரிவித்தார்


 

click me!