பாரத் பயோடெக் நிறுவனத்தின் ஊசியில்லா, மூக்கு வழி செலுத்தும்(Nasal Vaccine) பிபிவி154(BBV154) இன்கோவேக்(iNCOVACC )கொரோனா தடுப்பூசி இன்றுமுதல் அறிமுகம் செய்யப்படுகிறது.
பாரத் பயோடெக் நிறுவனத்தின் ஊசியில்லா, மூக்கு வழி செலுத்தும் பிபிவி154(BBV154) இன்கோவேக்(iNCOVACC )கொரோனா தடுப்பூசி இன்றுமுதல் அறிமுகம் செய்யப்படுகிறது.
இந்த தடுப்பூசியை 18 வயது அதற்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாகப் பயன்படுத்திக்கொள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. ஊசியில்லா இந்த மூக்குவழி தட்பூசி இன்று மாலை முதல் தனியார் மருத்துவமனைகளில் கிடைக்கும். விரைவில் மத்திய அரசின் கோவின் தளத்தில் பதிவிடப்படும்.
பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள பிபிவி154 எனும் மூக்குவழி செலுத்தும் தடுப்பூசிக்கு இந்திய மருந்துத் தரக்கட்டுப்பாட்டுஅமைப்புகடந்த நவம்பரில் ஒப்புதல் அளித்தது. இதன்படி, அவசரத் தேவைக்காக மட்டும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குப் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. இப்போது முழுமையாக தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்த சுகாதாரத்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.
இந்தியாவிலேயே முதல்முறையாக ஊசியில்லா, மூக்குவழியே செலுத்தும் முதல் தடுப்பூசி பாரத் பயோடெக்கின் பிபிவி154 தடுப்பூசியாகும்.
கோவின் தளத்தில் தற்போது பாரத் பயோடெக்கின் கோவாக்சின், சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்ட், கோவோவேக்ஸ், ரஷ்யாவின் ஸ்புட்னிக்வி, பயோலாஜிக்கல் இ நிறுவனத்தின் கோர்பிவேக்ஸ் ஆகியவை பட்டியலிடப்பட்டுள்ளன. விரைவில் பாரத் பயோடெக்கின் பிபிவி154 தடுப்பூசியும் பட்டியலிடப்படும்.
வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கான கொரோனா தடுப்பு விதிகளை வெளியிட்டது மத்திய அரசு
கடந்த செப்டம்பர் 6ம் தேதிபாரத் பயோடெக் நிறுவனத்தின் மூக்குவழி செலுத்தும் இன்கோவேக் தடுப்பூசிக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதியளித்தது. இதன்படி 18வயதுக்கு மேற்பட்டோருக்கு அவசரத் தேவைக்கு பயன்படுத்திக்கொள்ள பாரத் பயோடெக்கிற்கு அனுமதியளிக்கப்பட்டது.
ஆனால், சீனாவில் தற்போது அதிகரித்துவரும் ஒமைக்ரான் வைரஸின் திரிபு வைரஸால் கூட்டம்கூட்டமாக மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள், உயிரிழப்பும் நூற்றுக்கணக்கில் பெருகி வருகிறது.
இந்தியாவிலும் இதேபோன்ற நிலைமை வந்துவிடக்கூடாது என்பதற்காக மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடிவடிக்கைகளை அதிகரடியாக எடுத்துவருகிறது.
வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கான வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு அடுத்த அதிரடியாக மூக்குவழியே செலுத்தும் தடுப்பூசிக்கும் அனுமதியளித்துள்ளது.
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் திமுக எம்.பி. கனிமொழி பங்கேற்பு
பொதுவாக ஒரு தடுப்பூசி மனித உடலில் செலுத்தப்படும்போது, ரத்தத்தில் உள்ள பி செல்கள் செயல்பட்டு நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கும். இதற்கு igG ஆன்டிபாடிஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆன்டிபாடி உடலில் உள்ள வைரஸ்களைக் கண்டறிந்து டிசெல்கள் உதவியுடன் பாதிக்கப்பட்ட செல்களை அழிக்கிறது.