கண்ணீர்விட்டு கதறி அழுத இஸ்ரோ தலைவர் சிவன் !! தோளில் சாய்த்து ஆறுதல் கூறிய மோடி… நெகிழ்ச்சி சம்பவம் !!

By Selvanayagam PFirst Published Sep 7, 2019, 9:20 AM IST
Highlights

பிரதமர் மோடியிடம் இஸ்ரோ தலைவர் சிவன்கண்ணீர் விட்டு அழுதார். அவரை பிரதமர் மோடி கட்டிப்பிடித்து தேற்றிய  சம்பவம் உருக்கமாக இருந்தது.

நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக 'சந்திரயான் 2'  விண்ணுக்கு அனுப்பப்பட்டது. அத்திட்டத்தின் நிறைவுப்பணியான, விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கும் பணிக்கான ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்வை நேரலையில் காண, பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்திருந்தார்.

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களும், பூடானைச் சேர்ந்த மாணவர்களும் அங்கு திரண்டிருந்தனர். விஞ்ஞானிகள் மட்டுமின்றி, நாட்டு மக்கள் அனைவரும் ஆர்வத்துடனும், எதிர்பார்ப்புடனும் காத்திருக்க, விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கத் தொடங்கியது.

ஆனால் திட்டமிட்டபடி நிலவை நோக்கிச் சென்ற விக்ரம் லேண்டர், நிலவில் தரையிறங்க 2.1 கிலோ மீட்டர் தொலைவே இருந்தபோது, சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதனால், சிக்னல் மீண்டும் வரும் என்ற எதிர்பார்ப்பில் இஸ்ரோ மையமே நிசப்தமானது. 

இதனால் ஏமாற்றமடைந்த விஞ்ஞானிகள் சோகத்தில் ஆழ்ந்தனர். இதைத் தொடர்ந்து பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், விக்ரம் லேண்டரிலிருந்து எதிர்பார்த்தபடி சிக்னல் கிடைக்க வில்லை என்று அறிவித்தார். 

அப்போது அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்த பிரதமர் மோடி, , எதிர்வரும் விண்வெளித் திட்டங்களில் விஞ்ஞானிகள் சாதிப்பார்கள் என பிரதமர் மோடி நம்பிக்கையூட்டினார்.

இதையடுத்து இன்று காலை இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, பின்னர் அங்கிருந்து கிளம்பினார். அப்போது இஸ்ரோ தலைவர் சிவன், மோடியிடம் கண்ணீர் விட்டு அழுதார். அப்போது அவரை கட்டித் தழுவிய பிரதமர் மோடி, அவரை தேற்றிஆறுதல் கூறினார். இதைக் கண்ட அங்கிருந்த மற்ற விஞ்ஞானிகளும் கண்கலங்கினர்.

click me!