தாய் நாட்டுக்காக உழைக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தலை வணங்குகிறேன் !பிரதமர் மோடி உருக்கம் !!

By Selvanayagam PFirst Published Sep 7, 2019, 9:02 AM IST
Highlights

நிலவைத் தொடும் முயற்சியில் நாம்  நிச்சயம் வெற்றி பெறுவோம் என பேசிய பிரதமர் மோடி, நம் தாய் நாட்டுக்காக உழைக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தலை வணங்குவதாகவும் மோடி உருக்கமாக தெரிவித்தார்.

நிலவின் தென் பகுதியில் ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் அனுப்பிய சந்திரயான் 2  தரையிறங்குவதற்கு முன்பு சிக்னல் கிடைக்காமல் போனது. இது இஸ்ரோ விஞ்ஞானிகளிடையே  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்த பிரதமா மோடி இன்று காலை அவர்கிளிடைகே உரையாற்றினார். அப்போது . சந்திராயன்-2 திட்டத்துக்காக பல நாட்கள் தூங்காமல் இஸ்ரோ விஞ்ஞானிகள் பணியாற்றியுள்ளனர். இஸ்ரோ விஞ்ஞானிகளின் ஏமாற்றத்தை உணர்ந்துள்ளேன் என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் மோடி நிலவைத் தொடும் முயற்சியில் நாம்  நிச்சயம் வெற்றி பெறுவோம் என பேசிய பிரதமர் மோடி, நம் தாய் நாட்டுக்காக உழைக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தலை வணங்குவதாகவும் கூறினார்..சந்திராயனுக்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் இரவு பகலாக தூக்கமின்றி உழைத்தனர்.
நாட்டுக்காக வாழ்கிறார்கள் இஸ்ரோ விஞ்ஞானிகள். இவர்களை நினைத்து நாடே பெருமை கொள்கிறது. நமது தாய்நாட்டிற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் தூக்கமின்றி இரவு பகலாக உழைத்து வருகின்றனர். பின்னடைவு ஏற்படுத்திய தாக்கத்தை நான் உணர்ந்தேன்.

கடைசி வரை சந்திரயான் 2வுக்காக உழைத்ததற்கு நன்றி. நிச்சயமாக நிலவை தொடும் முயற்சி வெற்றி அடையும். இந்த விஷயத்தில் இளையோர் முதல் முதியோர் வரை அனைவருக்கும் கனவு ஒன்றாகவே இருந்தது. எதிர்காலத்தில் நாம் மேலும் முயற்சி செய்ய வேண்டியுள்ளது.
கடைசி நிமிட பின்னடைவு நிரந்தரம் அல்ல. நமது விண்வெளி திட்டம் குறித்து ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை. நாட்டின் வளர்ச்சிக்காக நம்ப முடியாத அளவுக்கு பணியாற்றியுள்ளீர்கள்.

குறிக்கோளை எவ்வளவு நெருங்க முடியுமோ, அவ்வளவு நெருங்கியுள்ளீர்கள். இதுவரை யாரும் முயற்சிக்காததை நீங்கள் முயற்சி செய்துள்ளீர்கள். நமது விண்வெளி திட்டத்தில் புதிய உச்சங்கள் இனிதான் வரவுள்ளன.

நானும், நாடும் உங்களுடனே இருக்கிறோம். புதிய விடியல் நமக்காக காத்திருக்கிறது. பொறியாளர்கள், விஞ்ஞானிகள் உழைப்பில் கர்வம் கொள்கிறேன். உங்கள் உழைப்பு நாட்டை தலை நிமிர வைத்துள்ளது.

உலக அரங்கில் இந்தியா தலைநிமிர இஸ்ரோ முக்கிய பங்கு வகிக்கிறது. சாதிக்க நமக்கான வாய்ப்புகள் இன்னும் நிறைய உள்ளது என தெரிவித்தார்..

click me!