"3 ஆண்டுகளாக உதயநிதி ஸ்டாலின் செங்கலைக் காட்டிக்கொண்டு இருக்கிறார். இந்தச் செங்கலை நாடாளுமன்றத்தில் காட்ட வேண்டியதுதானே? ரோட்டில் காட்டி என்ன பயன்?" என்று ஈபிஎஸ் கேள்வி எழுப்பினார்.
அதிமுக சார்பில் மக்களவைத் தேர்தல் பிரசாரம் இன்று திருச்சியில் தொடங்குகிறது. கூட்டணிக் கட்சித் தலைவர்களும் இந்த மாநாட்டில் கலந்துகொள்கின்றனர். இந்தப் பொதுக்கூட்டத்தில் 40 தொகுதிகளிலும் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி ஈபிஎஸ் தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.
திருச்சியில் பிரம்மாண்டமாக ஏற்பாட்டு செய்யப்பட்ட இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசினார். தமிழ்நாட்டில் வளர்ச்சியை ஏற்படுத்திய திட்டங்கள் அனைத்தும் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டவை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்துப் பேசிய அவர், "3 ஆண்டுகளாக உதயநிதி ஸ்டாலின் செங்கலைக் காட்டிக்கொண்டு இருக்கிறார். இந்தச் செங்கலை நாடாளுமன்றத்தில் காட்ட வேண்டியதுதானே? ரோட்டில் காட்டி என்ன பயன்?" என்று கேள்வி எழுப்பினார்.
மேகதாது அணை கட்ட ரஜினி, கமல் ரெண்டு பேரும் இதைச் செய்யணும்: வாட்டாள் நாகராஜ் பேட்டி
"எய்ம்ஸ் மருத்துவமனை விரைந்து கட்ட வேண்டும் என்றால் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்ய திமுகவிற்கு திராணி இல்லை. நாடாளுமன்றத்திற்கு சென்ற 38 எம்பிக்களும் பெஞ்சை தேய்த்தார்களே தவிர, எந்த சலுகையும் கேட்டு பெறவில்லை" எனவும் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
"நானும் அரசுப் பள்ளியில் படித்த மாணவன்தான். திமுகவினர் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவது இல்லை. நீட் தேர்வுக்கு காரணமே திமுக - காங்கிரஸ் தான். சாதனை, சாதனை என கூறினால் போதாது, செய்து காட்ட வேண்டும். அதிமுக ஆட்சியில் சிறப்பான ஆட்சியைக் கொடுத்தோம்" என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
"தமிழ்நாட்டில் மூன்று கூட்டணிகள் இருக்கின்றன. ஆனால், இந்தத் தேர்தலில் அதிமுக - திமுக இடையேதான் போட்டி" எனவும் எடப்பாடி பழனிசாமி கூறினார். திமுக, அதிமுக கூட்டணிகள் தவிர தமிழ்நாட்டில் இருக்கும் இன்னொரு கூட்டணி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிதான். ஆனால், பாஜகவின் பெயரைக் கூறாமல், மறைமுகமாக பாஜகவைக் குறிக்கும் வகையில் ஈபிஎஸ் பேசியுள்ளார்.
கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது குறுக்கே வந்த முக்குலத்தோர் கொடியால் எடப்பாடி பழனிசாமி கடுப்பாகிவிட்டார். கொடி பிடித்திருந்தவரை நோக்கி, "தம்பி அதை எடுத்துட்டு போப்பா" என்று விரட்டினார். இதனால், இபிஎஸ் முக்குலத்தோர் கொடியை அவமதித்துவிட்டார் என சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அசிங்கமான நிலையில் அயோத்தி ரயில் நிலையம்! துப்புரவு ஒப்பந்ததாரருக்கு ரூ.50,000 அபராதம்!