குடும்ப அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி செய்தி..! ரேஷனில் இனி இலவச பொருட்கள் கிடையாது

By Raghupati R  |  First Published Aug 23, 2022, 8:48 PM IST

யாரும் பசியுடன் தூங்கக்கூடாது என்ற திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு அரசு இலவச ரேஷன் வழங்கி வருகிறது. 


ஏழைகளின் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் இணைந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதுவும் கொரோனா தொற்றுக் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, வேலை இழந்தவர்களுக்கும், ஏழை மக்களுக்காகவும் அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. யாரும் பசியுடன் தூங்கக்கூடாது என்ற திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு அரசு இலவச ரேஷன் வழங்கி வருகிறது. 

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு..தமிழகத்தில் விரைவில் உயரும் மின் கட்டணம்.. பொதுமக்கள் அதிர்ச்சி - எவ்வளவு தெரியுமா ?

கொரோனாவுக்குப் பிறகு, மக்கள் பொருளாதார மட்டத்தில் பல சவால்களைக் கண்டுள்ளனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இரண்டு வேளை ரொட்டி கூட சரியாக கிடைக்காமல் தவிக்கும் பலர் உள்ளனர். அப்படிப்பட்டவர்களுக்காக அரசு சார்பில் இலவச ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதிய அறிவிப்புகளின் படி ரேஷன் கார்டுதாரர்கள் இலவசமாக வழங்கப்பட்டு வந்த உணவு தானியங்களை இனி விலை கொடுத்து வாங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் நாட்டின் ஏழை எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இத்தகைய சூழ்நிலையில், பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்னா யோஜனா (PMGKAY) திட்டத்தின் கீழ் இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இத்திட்டம் செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளது. இந்த திட்டத்தை செப்டம்பருக்கு மேல் நீட்டிக்கக் கூடாது என்று செலவினத்துறை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..ஆண் நண்பர்களுடன் உல்லாசம்.. போதையில் தள்ளாடிய தோழிகள் - காதலிக்கு முன்னாள் காதலன் கொடுத்த அதிர்ச்சி

இது ஜூன் முதல் ஆகஸ்ட் வரை இலவச ரேஷன் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது  செப்டம்பர் மாதத்தில் இருந்து ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச ரேஷன் வழங்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அரிசி, கோதுமை போன்ற பொருட்களுக்கு விலை கொடுத்து வாங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு.. அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் !

click me!