மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பாஜக பிரமுகரால் முகத்தில் சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட பழங்குடியின இளைஞரின் காலைக் கழுவி மன்னிப்பு கோரியுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒப்பந்தத் தொழிலாளர் ஒருவர் மீது பிரவேஷ் சுக்லா என்பவர் சிறுநீர் கழித்ததாக வெளியான வீடியோ வைரலாகப் பரவியது. பிரவேஷ் சுக்லா கைது செய்யப்பட்டு அவர் மீது பிரிவுகள் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 294, 504 மற்றும் SC/ST சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்த மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் வியாழக்கிழமை தஷ்ரத் ராவத்தை போபாலில் உள்ள முதல்வர் இல்லத்திற்கு நேரில் வரவழைத்து, அவரது கால்களைக் கழுவினார். சித்தியில் குற்றம் சாட்டப்பட்ட பிரவேஷ் சுக்லாவின் வீடு இடித்துத் தள்ளப்பட்டதைத் தொடர்ந்து முதல்வர் சவுகான் காலைக் கழுவி மன்னிப்பு கோரிய தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணாமலை யாருன்னே தெரியாது... தமிழ்நாட்டில் பாஜகன்னு ஒரு கட்சி இருக்கா?: சுப்பிரமணியன் சுவாமி பேட்டி
தஷ்ரத் ராவத்தை தனது இல்லத்திற்கு அழைத்து வந்த முதல்வர், அவரை நாற்காலியில் அமரச் செய்து அவரது கால்களை கழுவினார். அவரிடம் மன்னிப்பு கோரிய முதல்வர் சவுகான், "...அந்த காணொளியை பார்த்து நான் வேதனை அடைந்தேன். நான் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். மக்கள் எனக்கு கடவுள் போன்றவர்கள்...." என்று தெரிவித்துள்ளார்.
பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞர் மீது சிறுநீர் கழித்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் பிரவேஷ் பாஜக நிர்வாகி என்றும் சித்தி கேதார்நாத் சுக்லா பாஜக எம்எல்ஏவுக்கு நெருக்கமானவர் என்றும் தெரியவந்தது. அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பல தரப்பினரும் வலியுறுத்தினர்.
பழங்குடியின இளைஞர் முகத்தில் சிறுநீர் கழித்த பாஜக நிர்வாகியின் வீட்டை இடித்துத் தள்ளிய அரசு
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, அவரது சொத்துக்களை பறிமுதல் செய்து புல்டோசர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். "மத்திய பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் ஆதிவாசி / தலித் இளைஞர் மீது உள்ளூர் பாஜக தலைவர் சிறுநீர் கழித்த சம்பவம் வெட்கக்கேடானது, மனிதாபிமானமற்றது மற்றும் கண்டனத்திற்குரியது. வீடியோ வைரலான பிறகுதான் அரசு விழித்துக்கொண்டிருக்கிறது என்பதும் மிகவும் வருத்தம் அளிக்கிறது." என்றும் மாயாவதி ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
இதனிடையே, சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது பழைய வீடியோ என்றும் வேண்டுமென்றே தேர்தல் வரவிருக்கும் சூழலில் அதை பரப்பி இருக்கிறார்கள் என்றும் பிரவேஷ் சுக்லாவின் குடும்ப உறுப்பினர்கள் சொல்கிறார்கள். "இது தேர்தலை முன்னிட்டு அரசியல் உள்நோக்கத்துடன் பரப்பப்பட்ட பழைய வீடியோ" என பிரவேஷ் சுக்லாவின் சகோதரி கூறுகிறார்.
லண்டன் இந்தியத் தூதரகம் முன்பு காலிஸ்தான் பிரிவினைவாதிகள் போராட்டம்! ட்விட்டரில் பரவும் போஸ்டர்!