விரைவில் ஷிண்டேவில் முதல்வர் பதவி குளோஸ் .. பாஜகவுக்கு ஓட தயாராகும் 22 MLA க்கள்.. சாம்னா அதிரடி.

By Ezhilarasan Babu  |  First Published Oct 25, 2022, 6:00 PM IST

ஏக்நாத் ஷிண்டே மீதான அதிருப்தியால் அவரின் கீழ் உள்ள 40 எம்எல்ஏக்களில் 22 பேர் பாஜகவை நோக்கி ஓடுவார்கள் என சிவசேனா வார இதழ் சாம்னா கட்டுரை வெளியிட்டுள்ளது.


ஏக்நாத் ஷிண்டே மீதான அதிருப்தியால் அவரின் கீழ் உள்ள 40 எம்எல்ஏக்களில் 22 பேர் பாஜகவை நோக்கி ஓடுவார்கள் என சிவசேனா வார இதழ் சாம்னா கட்டுரை வெளியிட்டுள்ளது. ஏக்நாத் ஷிண்டே மீது அவர்கள் அவர்கள் அதிருப்தியில் உள்ளதால் அவர்கள் விரைவில் பாஜகவில் இணைவார்கள் என்றும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடு சாம்னா கூறியுள்ளது.

Latest Videos

இதையும் படியுங்கள்: தீபாவளிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து சொல்லாதது ஏன்? ஆர்.பி.உதயகுமார் கேள்வி!!

மகாராஷ்டிரா மாநிலத்தை உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி ஆட்சி செய்து வந்தது. இந்நிலையில் உத்தவ் தாக்கரே தலைமையின் மீது அதிருப்தி ஏற்பட்டு ஷிண்டே தலைமையில் 40 பேர் தனி அணியாக பிரிந்தனர். இதனால் சிவசேனாவில் இரண்டு அணிகள் உருவானது. இந்நிலையில் இரண்டு அணிகளும் சிவசேனா கட்சிக்கு உரிமை கோரி வருகிறது. இந்நிலையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் உள்ள எம்எல்ஏக்களின் 22 பேர் பாஜகவுக்கு செல்ல தயாராகி வருவதாக உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சிக்கு ஆதரவான சாம்னா பத்திரிகை கட்டுரை வெளியிட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:  மதக் கலவரங்களை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் பெற நினைப்பதா.? அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த செந்தில்பாலாஜி

அக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது :- ஷிண்டே எந்த நேரத்திலும் முதல் மந்திரி  பதவியிலிருந்து இறக்கபடுவார். அவரது முதல்வர் சீருடை எப்போது வேண்டுமானாலும் கழற்றப்படலாம் என்பதை அனைவரும் புரிந்து கொண்டுள்ளனர். அந்தோரி கிழக்கு இடைத் தேர்தலில்ஷிண்டே ஒரு வேட்பாளரை நிறுத்தி இருக்க வேண்டும், ஆனால் அதற்குத் தடையாக இருந்தது பாஜகதான். மகாராஷ்டிராவின் கிராம பஞ்சாயத்து மற்றும் சர்பஞ்ச் தேர்தல்களில் வெற்றி பெற்றதாக ஷிண்டே தரப்பினர் கூறுவருவது உண்மைக்கு புறம்பானது. ஷிண்டே குழுவை சேர்ந்த 22 எம்எல்ஏக்கள் அவர் மீது மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

இந்த எம்எல்ஏக்கள் பெரும்பான்மையானவர்கள் பாஜக உடன் தங்களை இணைத்துக் கொள்வார்கள். ஷிண்டே தனக்கும், மகாராஷ்டிரா மாநிலத்திற்கும் பெரும் துரோகத்தை செய்துவிட்டார். அவரை ஒருபோதும் அரசும், மக்களும் மன்னிக்க மாட்டார்கள், பாஜக தொடர்ந்து ஷிண்டேவை தனது சுயநலத்திற்காக பயன்படுத்தும். என சாம்னா பத்திரிக்கை வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளது. தற்போது அரசாங்கத்தின் அனைத்து முடிவையும் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தான் எடுக்கிறார்.  முதல்வர் ஷிண்டேவால் எந்த முடிவும் எடுக்கப்படுவதில்லை என்றும் அந்த பத்திரிகை குற்றம் சாட்டியுள்ளது.  
 

click me!