கடந்த ஒரு மணிநேரமாக வாட்ஸ்அப் செயலி முடங்கிய நிலையில், தற்போதுமீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
கடந்த ஒரு மணிநேரமாக வாட்ஸ்அப் செயலி முடங்கிய நிலையில், தற்போதுமீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
வாட்ஸ்அப் செயலி ஏறக்குறைய நண்பகல் 12.30 மணியிலிருந்து இந்தியாவில் இயங்கவில்லை. ஒருமணிநேரத்துக்கும் மேலாக முன் திடீரென முடங்கியது. இதனால் மெசேஜ்களையும், படங்களையும், வீடியோக்களையும் அனுப்ப முடியாமலும், பெற முடியாமல் பயனாளிகள் பெரியசிரமத்துக்குள்ளாகினர்.
வாட்ஸ்அப் தாய் நிறுவனமான, மெட்டா நிறுவன செய்தித்தொடர்பாளர் கூறுகையில் “ வாட்ஸ்அப் மூலம் செய்திகள்,வீடியோக்கள், புகைப்படங்களை அனுப்புமுடியாமல் சிரமங்களைச் சந்திப்பதாக தகவல் அறிந்தோம். வாட்ஸ்அப் சேவையை இயல்புக்கு கொண்டுவர முயன்று வருகிறோம். விரைவாக குறைபாடுகளை சரிசெய்துவிடுவோம்” எனத் தெரிவித்தார்.
டவுன்டிடெக்டர் இணையதளத்தின்படி, “ வாட்ஸ்அப் பயனாளிகளில் 70 சதவீதம் பேருக்கு செய்திகளை அனுப்புவதில் சிரமமும், 24 சதவீதம் பேருக்கு வாட்ஸ் அப் இணைவதில் சிரமங்களும், 7 சதவீதம் பேருக்கு சர்வர் இணைவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளது
இந்நிலையில் ஒருமணிநேரத்துக்கும் மேலான முடக்கத்துக்குப்பின் வாட்ஸ்அப் சேவை மீண்டும் பிற்பகல் 2 மணி அளவில் இயங்கத் தொடங்கியது. தற்போது வாட்ஸ்அப் செயலியில் புகைப்படங்கள், வீடியோக்கள், செய்திகளை உடனுக்குடன் அனுப்ப முடிகிறது. ஆனால் முழுமையாக வாட்ஸ்அப் செயலி செயல்பாட்டுக்கு வரவில்லை. குறிப்பிட்ட நகரங்கள், மாநிலங்களில் மட்டும்தான் வாட்ஸ்அப் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது.வாட்ஸ்அப் செயலி மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தபின்புதான் பயனாளிகள் நிம்மதிஅடைந்தனர்.