Shashi Tharoor votes: ‘பாத்ரூமில் உங்கள அடைக்கலைணு சந்தோஷப்படுங்க’! சசி தரூரை கிண்டலடித்து கொம்புசீவும் பாஜக

By Pothy RajFirst Published Oct 19, 2022, 4:09 PM IST
Highlights

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த திருவனந்தபுரம் எம்.பி. சசி தரூரை கொம்பு சீவிவிடும் வகையில் பாஜக கட்சி விமர்சித்து அவரை உசுப்பேற்றி, கிண்டல் செய்து வருகிறது

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த திருவனந்தபுரம் எம்.பி. சசி தரூரை கொம்பு சீவிவிடும் வகையில் பாஜக கட்சி விமர்சித்து அவரை உசுப்பேற்றி, கிண்டல் செய்து வருகிறது

காங்கிரஸ் கட்சிக்கு புதியத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் 17ம்தேதி  நடந்தது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு கர்நாடகத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கேவும், கேரளாவைச் சேர்ந்த சசி தரூரும் போட்டியிட்டனர். சோனியா காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் கடந்த 24 ஆண்டுகளில் தலைவர் பதவிக்கு போட்டியாதது இதுதான் முதல் முறையாகும்.

காங்கிரஸ் புதிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே: தோல்வியடைந்த சசி தரூர் கூறியது என்ன?

அனைத்து மாநிலங்களிலும் 68 பூத்களிலும் காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்களித்தனர், ஏறக்குறை. 9500 வாக்குகள் பதிவாகின. அனைத்து வாக்குப்பெட்டிகளும் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டு இன்று வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் மல்லிகார்ஜுன கார்கே7,897 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார், சசி தரூர் 1,072 வாக்குகள் பெற்றார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் மல்லிகார்ஜுன கார்கே : யார் இவர்? பின்னணி என்ன?

இந்த தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் நடந்த வாக்குப்பதிவு ஏராளமான முறைகேடுகள் நடந்ததாக தேர்தல் அதிகாரி மதுசூதன் மிஸ்திரிக்கு சசி தரூர் கடிதம் எழுதினார். உ.பியில் பதிவான வாக்குகள் அனைத்தும் செல்லாத வாக்குகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கடிதத்தில் சசி தரூர் குறிப்பிட்டார்.

இந்த கடிதத்தை சசி தரூர் எழுதியபின், பாஜக அவரை கிண்டலடித்து அவரை கொம்புசீவிடும் வேலையில் இறங்கியுள்ளது. 

பாஜக தகவல் தொழில்நுட்பத்துறை தலைவர் அமித் மாளவியா ட்விட்டரில், சசி தரூரை கிண்டல் செய்து கருத்துப்பதிவிட்டுள்ளார். அதில் “ காங்கிரஸ் தலைவர் தேர்தலில் உண்மையிலேயே தோல்விஅடைந்த நபர் போல, சசி தரூர் புலம்பித் தள்ளுகிறார், குற்றம்சாட்டுகிறார். காங்கிரஸ் தலைவர் தேர்தல் நேர்மையாக, சுதந்திரமாக நடக்கும் என்று உண்மையிலேயே சசி தரூர் எதிர்பார்த்தாரா? குளியலறையில் சசி தரூர் அடைத்துவைக்கப்படாததற்கு அவர் நன்றியுடன் இருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு இன்னும் மோசமான காலம் வரவில்லை. அடுத்த சில மாதங்களில், சோனியா காந்தி குடும்பத்தை எதிர்த்தமைக்காக கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாக்கப்படுவார்” எனத் தெரிவித்துள்ளார்.

பாரத் ஜோடோ நடைபயணம்: ராகுல் காந்தியுடன், உத்தவ் தாக்கரே, சரத் பவார் பங்கேற்பு

இந்த தோல்விக்குப்பின் சசி தரூர் வெளியிட்ட அறிக்கையில் “ காங்கிரஸ் நிர்வாகிகள் முடிவுதான் இறுதியானது. இந்த முடிவை பணிவுடன் ஏற்கிறேன். காங்கிரஸ்கட்சியில் தொண்டராக, உறுப்பினராகஇருந்து தலைவரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு பெற்றதை பெருமையாகக் கருதுகிறேன். 
எங்களின் புதிய தலைவர், அனுபவம்மிக்கவர், மூத்த தலைவர். அவரின் வழிகாட்டுதலில், ஒட்டுமொத்தமாக சேர்ந்து உழைத்து, கட்சியை அடுத்தக் கட்டத்துக்கு உயர்த்துவோம்” எனத் தெரிவித்துள்ளார்

click me!