Mallikarjun Kharge :காங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் மல்லிகார்ஜுன கார்கே : யார் இவர்? பின்னணி என்ன?

By Pothy Raj  |  First Published Oct 19, 2022, 2:32 PM IST

கர்நாடக மண்ணின் மைந்தர், காந்தி குடும்பத்துக்கு தீவிரமான விசுவாசி, கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி வளர உதவியவர்களில் முக்கியமானவர் என்ற பெருமையைக் கொண்ட மாபன்ன மல்லிகார்ஜுன கார்கே  கார்கே, காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக உள்ளார்.


கர்நாடக மண்ணின் மைந்தர், காந்தி குடும்பத்துக்கு தீவிரமான விசுவாசி, கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி வளர உதவியவர்களில் முக்கியமானவர் என்ற பெருமையைக் கொண்ட மாபன்ன மல்லிகார்ஜுன கார்கே  கார்கே, காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக உள்ளார்.

கடந்த 24 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியில் சோனியா காந்தி குடும்பத்தைச் சேராதவர்கள் தலைவராகவது இதுதான் முதல்முறையாகும். 80வயதான மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்திக்கு அடுத்தார்போல் தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.

Latest Videos

காங்கிரஸ் கட்சிக்குபுதிய தலைவர் தேர்ந்தெடுக்க கடந்த 17ம் தேதி நடத்தப்பட்ட தேர்தலில் நாடுமுழுதும் 9500 நிர்வாகிகள் வாக்களித்தனர். இதில் திருவனந்தபுரம் எம்.பி.சசி தரூரை தோற்கடித்து மல்லிகார்ஜுன கார்கே தலைவராகிறார். 

பாரத் ஜோடோ நடைபயணம்: ராகுல் காந்தியுடன், உத்தவ் தாக்கரே, சரத் பவார் பங்கேற்பு

இதுவரை வாக்குகள் எண்ணப்பட்டதில் 7ஆயிரம் வாக்குகளுடன் மல்லிகார்ஜுன கார்கே வெற்றியை நெருங்கிவிட்டார். அதேசமயம், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சசிதரூர் 1000 வாக்குகளுடன் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார்.

தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவி்ல்லை என்றபோதிலும், வாக்கு எண்ணிக்கை நிலவரம் மல்லிகார்ஜுன கார்கே அடுத்த தலைவர் என்பதை தெளிவுபடுத்திவிட்டது.

அரசியலில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர் மல்லிகார்ஜுன கார்கே. கர்நாடக காங்கிரஸில் நிஜலிங்கப்பாவுக்கு அடுத்தார்போல், தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து தலைவராக வந்தவர் மல்லிகார்ஜுன கார்கே. 

கர்நாடக மாநிலத்தில் 9 முறை எம்எல்ஏவாக மல்லிகார்ஜுன தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். குல்பர்கா மாவட்டத்தில் பிறந்த மல்லிகார்ஜுன கார்கே சாதாரணத் தொண்டராக இருந்து தனது பணிவான குணத்தால் படிப்படியாக கட்சியின் பதவிப்படிக்கட்டுகளில் பயணத்தார். 

காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் யார்? தேர்தல் முடிவு இன்று அறிவிப்பு!!

கடந்த 1969ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தபின், குல்பர்கா காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே நியமிக்கப்பட்டார்

கடந்த 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மோடி அலை வீசியபோது கர்நாடக மாநிலத்தின் பெரும்பாலான மக்களவைத் தொகுதியில் பாஜக வென்றது. அப்போது தனது குல்பர்கா தொகுதியில் 74ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தி்ல் மல்லிகார்ஜுன கார்கே வென்று பாஜகவுக்கு சிம்மசொப்னமாகத் திகழ்ந்தார்.

குல்பர்கா மக்களவைத் தொகுதியில் இருமுறை மல்லிகார்ஜுன கார்கே எம்.பியாகஇருந்துள்ளார். ஆனால், 2019ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் உமேஷ் யாதவிடம் 95,452 வாக்குகளில் கார்கே தோல்வி அடைந்தார். மல்லிகார்ஜுன கார்கே என்றாலே கர்நாடகத்தில் "தோல்வி அடையாத தலைவர் " என்ற அடை மொழி இருந்தநிலையில் அது 50 ஆண்டுகளுக்குப்பின் மாறியது. 

சோனியா காந்தி குடும்பத்துக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் தீவிரமான விசுவாசியாக மல்லிகார்ஜுன கார்கே இருக்கிறார். பல்வேறு அமைச்சர் பதவிகளையும், மத்திய அமைச்சர் பதவியையும் மல்லிகார்ஜுன கார்கே வகித்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராகவும், மாநில காங்கிரஸ் தலைவராகவும் கார்கே பதவி வகித்துள்ளார்.

புதிய காங்கிரஸ் தலைவர் யார்..? நாளை வாக்கு எண்ணிக்கை..! தமிழகத்தில் வாக்களிக்காத 7% பேர்..!

2014 முதல் 2019ம் ஆண்டுவரை மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே இருந்தார், ஆனால், எதிர்க்கட்சித் தலைவராக இல்லை.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சராகவும், ரயில்வே அமைச்சராகவும், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சராகவும் கார்கே இருந்தார்.

கர்நாடக மாநிலத்தில் முதல்வராக எஸ்எம் கிருஷ்ணா இருந்தபோது, உள்துறை அமைச்சராக கார்கே இருந்தார். அப்போது கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திய சம்பவம், காவிரி நதிநீர் பங்கீடு, அது தொடர்பாக எழுந்த சட்டம் ஒழுங்கு சிக்கல் ஆகியவற்றை கார்கே திறம்படக் கையாண்டார்.

2020ம் ஆண்டு முதல் மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் கார்கே, 17வது மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக பதவியி்ல் இருந்தார். கர்நாடக மாநிலத்தின் முதல்வராக பலமுறை கார்கேவைத் தேர்வு செய்ய பேச்சுகள் எழுந்தபோது, சில காரணங்களால் அவரின் பெயர் நிராகரிக்கப்பட்டது

காங்கிரஸ் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது: சோனியா, பிரியங்கா வாக்களிப்பு

கர்நாடக மாநிலம், பிதார் மாவட்டத்தில் வரபட்டியில் ஏழ்மையான குடும்பத்தில் 1942, ஜூலை 21ம் தேதி மல்லிகார்ஜுனகார்கே பிறந்தார். கலாபுர்கியில் பள்ளிப்படிப்பையும், கல்லூரிப்படிப்பையும், சட்டப்படிப்பையும் கார்கே முடித்தார். அரசியலுக்கு வரும்சில ஆண்டுகள் வழக்கறிஞராக கார்கே பயிற்சியும் எடுத்திருந்தார். 

பெளத்தமதத்தை பின்பற்றும் கார்கே, சித்தார்த் விஹார் அறக்கட்டளையின் தலைவர் ,நிறுவனராக இருக்கிறார். கடந்த 1968ம் ஆண்டு, மே 13ம் தேதி ராதாபாய் என்ற பெண்ணை கார்கே திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 மகள்களும், 3 மகன்களும் உள்ளனர்.

click me!