Shashi Tharoor:உ.பி.யில் பதிவான வாக்கு செல்லாது! காங்கிரஸ் தேர்தல் அதிகாரிக்கு கடிதம் மூலம் சசி தரூர் புலம்பல்

By Pothy Raj  |  First Published Oct 19, 2022, 5:12 PM IST

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் ஏராளமான மோசடிகள் நடந்துள்ளதால், அங்கு பதிவான வாக்குகள் அனைத்தும் செல்லாது என அறிவிக்கக் கோரி தேர்தல் அதிகாரி மதுசூதன் மிஸ்திரிக்கு திருவனந்தபுரம் எம்.பி. சசி தரூர் கடிதம் எழுதியுள்ளார்.


காங்கிரஸ் தலைவர் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் ஏராளமான மோசடிகள் நடந்துள்ளதால், அங்கு பதிவான வாக்குகள் அனைத்தும் செல்லாது என அறிவிக்கக் கோரி தேர்தல் அதிகாரி மதுசூதன் மிஸ்திரிக்கு திருவனந்தபுரம் எம்.பி. சசி தரூர் கடிதம் எழுதியுள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்கு புதியத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் 17ம்தேதி  நடந்தது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு கர்நாடகத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கேவும், கேரளாவைச் சேர்ந்த சசி தரூரும் போட்டியிட்டனர். இன்று வாக்குகள் எண்ணப்பட்டன. 

Tap to resize

Latest Videos

இதில் மல்லிகார்ஜுன கார்கே7,897 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார், சசி தரூர் 1,072 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

காங்கிரஸ் புதிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே: தோல்வியடைந்த சசி தரூர் கூறியது என்ன?

இந்நிலையில் உத்தரப்பிரதேசம் பதிவான வாக்குகள் அனைத்தும் செல்லாது என்றுஅறிவிக்கவும், தெலங்கானா, பஞ்சாப் மாநில்தில் தீவிரமான பிரச்சினைகள் இருப்பது குறித்தும் சசி தரூர் கடிதம் மூலம், தேர்தல் அதிகாரி மதுசூதன் மிஸ்திரிக்கு தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தேர்தல் அதிகாரி மதுசூதன் மிஸ்திரிக்கு சசி தரூர் ஏஜென்ட் சல்மான் சூஸ் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: 

உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் நம்பகத்தன்மை இல்லாமல் இருக்கிறது. வாக்குப்பதிவு ஏஜென்டுகளிடம் தீவிரமாக ஆலோசித்தேன். ஆனால், உண்மை நிலவரம் வேதனையாக இருக்கிறது

‘பாத்ரூமில் உங்கள அடைக்கலைணு சந்தோஷப்படுங்க’! சசி தரூரை கிண்டலடித்து கொம்புசீவும் பாஜக

உத்திரபிரதேசத்தில் தேர்தல் நிலவரம் என்பது, தேர்தல் நடத்தும் உங்கள் அலுவலகத்தின் அதிகாரத்திற்கு வெளிப்படையான சவாலாகவும், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதற்கான காங்கிரஸ் தலைவர் மற்றும் காங்கிரஸ் காரியக் கமிட்டியின் உத்தரவுகளை அவமதிப்பதாகவும் இருக்கிறது

உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் முறைகேடுகளில் மல்லிகார்ஜுன கார்கே ஆதரவாளர்கள் ஈடுபட்டது குறித்து கார்கே அறிந்திருந்தார் என்பதற்கு எங்களிடம் எந்த ஆதாரமும் இல்லை. அவர் அறிந்திருந்தால், உத்தரபிரதேசத்தில் நடந்ததை அவர் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். காங்கிரஸ் தேர்தலில் கறைபடிவதை கார்கேஒருபோதும் அனுமதிக்கமாட்டார். இந்த தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு முக்கியமானது.

உத்தரப்பிரதேசத்தின் கறைபடிந்த செயல்முறையை நிலைநிறுத்த அனுமதித்தால் இந்தத் தேர்தல் எவ்வாறு சுதந்திரமாகவும் நியாயமாகவும் கருதப்படும் என்பதை நாம் பார்க்கவில்லை. எனவே, உத்தரப் பிரதேசத்தில் உள்ள அனைத்து வாக்குகளும் செல்லாதவையாகக் கருதப்பட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.

இந்த தேர்தலில் வாக்காளர் மோசடி நடந்ததாக சந்தேகிக்கப்படுகிறோம். வாக்களிக்கும் நாளில் லக்னோ பகுதியில் காணப்படாத பிரதிநிதிகள், வாக்களித்துள்ளனர்.  ஏற்கனவே வாக்களித்துவிட்டதாகக் கூறி பலரை வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை என புகார்கள் வந்தன.

காங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் மல்லிகார்ஜுன கார்கே : யார் இவர்? பின்னணி என்ன?

வாக்காளர் முறைகேடு குறித்து எங்கள் முகவர்கள் புகார் தெரிவித்தபோது, மறுபுறம் மற்றொரு தரப்பின் ஆதரவாளர்கள் வாக்குச் சாவடிக்குள் வந்து சலசலப்பை உருவாக்கி, எங்கள் வாக்குச் சாவடி முகவர்களை அச்சுறுத்தத் தொடங்கினர்.

தேர்தலில் போட்டியிட்ட இரு போட்டியாளர்களும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால் வெற்றி தோல்வி என்பது முக்கியமல்ல. எவ்வாறாயினும், இந்தத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் வலுப்பெறுவதை உறுதிசெய்வது எங்கள் பிரச்சாரம், எங்கள் தொண்டர்கள் மற்றும் எங்கள் ஆதரவாளர்களுக்கு மிகவும் முக்கியமானது.

எந்த தேர்தல் முறையும் 100 சதவீதம் சரியானதல்ல. புரிந்து கொள்கிறோம். அனைத்து இந்திய காங்கிரஸ்கட்சி வகுத்த தேர்தல் விதிகளில் ஏராளமான விதிமீறல்கள் இருந்தன என்பதையும் ஏற்க வேண்டும். 

நேர்மையற்ற மற்றும் நியாயமற்ற முறையில் நாங்கள் நடத்தப்பட்டதைக் கண்டு நாங்கள் அமைதியாகவே இருந்தோம், இது நாங்கள் களத்தில் செயல்படுவதைத் தடுக்கிறது. எங்களின் சகாக்கள் பலரும்  காங்கிரஸ் தலைவர் மற்றும் ராகுல் காந்தியின் பேச்சு, வழிகாட்டுதல்களுக்கு மாறாக செயல்பட்டபோது கட்சியின் பொது இமேஜைப் பாதுகாக்க நாங்கள் அதை ஏற்றுக்கொண்டோம். 

இனிமேல் இது தொடரக்கூடாது. கட்சியின் மாண்பைப் பாதுகாப்பது மட்டும் எங்கள் பிரச்சாரத்தின் வேலை அல்ல. மற்றவர்கள் இனிமேல் முன்வந்து தங்கள் பங்கைச் செய்ய வேண்டும். அவர்களுக்கும் பொறுப்பு இருக்கிறது

உத்தரபிரதேசத்தில் கறைபடிந்த தேர்தல் செயல்முறையை நிலைநிறுத்த அனுமதித்தால், இந்தத் தேர்தல் எவ்வாறு சுதந்திரமாகவும் நியாயமாகவும் கருதப்படும். ஆதலால் உ.பி.யில் பதிவான அனைத்து வாக்குகளையும் செல்லாது என அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு சல்மான் தெரிவித்துள்ளார்

click me!