கோவிட்-19 தடுப்பூசி விநியோகத்தில் இந்தியாவின் தடுப்பூசி மைத்ரி திட்டத்தை சசி தரூர் பாராட்டினார். இது உலக அரங்கில் இந்தியாவின் சக்தியை மேம்படுத்தியது மற்றும் உலகளாவிய சுகாதார சவால்களை எதிர்கொள்ளும் திறனை வலுப்படுத்தியது என்று அவர் கூறினார்.
பல நாடுகளுக்கு கோவிட்-19 தடுப்பூசிகளை விநியோகிக்க உதவிய நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் தடுப்பூசி மைத்ரி முயற்சியை காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பாராட்டியுள்ளார்.
தி வீக் இதழில் எழுதியுள்ள ஒரு கட்டுரையில், உலகின் தடுப்பூசி உற்பத்தி மையமாக இந்தியா தன்னை நிலைநிறுத்திக்கொண்டது எப்படி என்றும் அதன் மூலம் உலக அரங்கில் இந்தியாவின் சக்தி கணிசமாக மேம்பட்டுள்ளது என்றும் சசி தரூர் எடுத்துரைத்தார்.
வானிலை ஆய்வு மையத்துக்கு ரூ.226 கோடி வருவாய்! எப்படி வருது தெரியுமா?
கோவிட்-19 தொற்றுநோய் உச்சத்தில் இருந்தபோது ஜனவரி 2021 இல் தொடங்கப்பட்ட தடுப்பூசி மைத்ரி திட்டம் மூலம் வளரும் நாடுகளுக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை இந்தியா வழங்கியது. சமமான தடுப்பூசி விநியோகத்தை உறுதி செய்வதற்கான உலகளாவிய கோவாக்ஸ் திட்டத்திற்கு இந்தியாவும் பங்களித்துள்ளது என சசி தரூர் குறிப்பிட்டுள்ளார்.
தொற்றுநோயின் இருண்ட நாட்களில் இந்தியாவின் தடுப்பூசி விநியோகம் ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்றாக இருந்தது எனவும் சசி தரூர் கூறியுள்ளார். இது உலகளாவிய சுகாதார அமைப்பில் இந்தியாவின் பங்கையும் உலகளாவிய சுகாதார சவால்களை எதிர்கொள்ளும் திறனையும் வலுப்படுத்தியது எனவும் தனது கட்டுரையில் எழுதியுள்ளார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் வெளியுறவுத் துறை இணையமைச்சராகப் பணியாற்றிய சசி தரூர், நெருக்கடியான நேரங்களில் பிற நாடுகளுக்கு உதவிக்கரம் நீட்டும் திறனை தடுப்பூசி மைத்ரி திட்டம் மூலம் இந்தியா மீண்டும் நிரூபித்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் தடுப்பூசி ஏற்றுமதி பரவலாகப் பாராட்டப்பட்டதாகவும், இந்தியாவின் உலகளாவிய பிம்பத்தை மேம்படுத்தியதாகவும் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கூறுகிறார். தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்காவில் சீனாவின் விரிவடைந்து வரும் செல்வாக்கிற்கு ஈடாக இந்தியாவின் தடுப்பூசி விநியோகத் திட்டம் செயல்பட்டது எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இஸ்ரோவில் வேலை செய்ய ஆசையா? பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு!
கோவிட்-19 இரண்டாவது அலையின்போது தடுப்பூசி ஏற்றுமதி தற்காலிகமாக பாதிக்கப்பட்டாலும், இந்தியாவின் தடுப்பூசி திட்டம் தனது சக்தியை நிரூபித்தது என்றும் சசி தரூக் கூறியுள்ளார். "கோவிட்-19 இன் இரண்டாவது அலை இந்தியாவின் தடுப்பூசி ஏற்றுமதியை தற்காலிகமாக சீர்குலைத்தது உண்மைதான். இருந்தாலும் இந்தியாவின் தடுப்பூசி ராஜதந்திரம் அதன் வெளியுறவுக் கொள்கையில் ஒரு குறிப்பிடத்தக்க அத்தியாயமாக உள்ளது. இது மனிதாபிமானத்தை மூலோபாய நலன்களுடன் இணைக்கும் திறனைப் பிரதிபலிக்கிறது," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.