ஒடிசாவில் பெங்களூருவில் இருந்து சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் உயிரிழந்து விட்டார்.
Bengaluru Express train derails in Odisha: ஒடிசா மாநிலம் கட்டாக்கில் பெங்களூரு-காமக்யா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில் ஒருவர் உயிரிழந்தார். 8 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் தத்தாத்ரேய பாவுசாஹேப் ஷிண்டே கூறுகையில், ''பெங்களூர்-காமக்யா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்ட விபத்தில் ஒருவர் இறந்துவிட்டார். காயமடைந்த 8 பேருக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றார்.
ஓடிசாவில் ரயில் விபத்து
முன்னதாக, அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, தனது மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பயணிகள் ரயில் விபத்தில் காயமடைந்ததாகக் கூறினார்.''ரயில் 12551 தொடர்பான சம்பவம் குறித்த புதுப்பிப்பை பகிர்ந்து கொள்கிறேன். அசாமில் இருந்து உயிரிழப்புகள் எதுவும் இல்லை. மாநிலத்தைச் சேர்ந்த 2 பேர் - உடல்குரியைச் சேர்ந்த வில்சன் டிகால் மற்றும் பக்ஸாவைச் சேர்ந்த அமிரன் நிஷா ஆகியோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவரும் ஆபத்தில் இருந்து வெளியேறிவிட்டனர்" என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பதினொரு பெட்டிகள் தடம் புரண்டன
பெங்களூர்-காமக்யா அதிவிரைவு ரயிலின் பதினொரு பெட்டிகள் இன்று காலை 11.54 மணியளவில் நெர்குண்டி ரயில் நிலையம் அருகே தடம் புரண்டன. இதற்கிடையில், குர்தா ரோடு பிரிவின் கோட்ட ரயில்வே மேலாளர் எச்.எஸ்.பாஜ்வா, என்.டி.ஆர்.எஃப் மற்றும் எஸ்.டி.ஆர்.எஃப் குழுக்கள் விபத்து நடந்த இடத்தில் இருப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். "இன்று பெங்களூர்-காமக்யா எக்ஸ்பிரஸ் நெர்குண்டி ரயில் நிலையம் அருகே தடம் புரண்டது.
திருச்சி-யாழ்ப்பாணம் நேரடி விமான சேவை!
சிறப்பு ரயில் இயக்கம்
அதே பாதையில் ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது, அது அதே இடத்திற்கு செல்லும். இதற்குப் பிறகு, சீரமைப்புப் பணிகள் தொடங்கும். ரயில்வேயில் இருந்து இழப்பீடு வழங்குவோம். உணவு, தண்ணீர், முதலுதவி மற்றும் பேருந்துகளையும் ஏற்பாடு செய்துள்ளோம். என்.டி.ஆர்.எஃப் மற்றும் எஸ்.டி.ஆர்.எஃப் படைகள் இங்கு உள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தப்படும்" என்று பாஜ்வா கூறினார்.
விபத்துக்கு காரணம் என்ன?
முன்னதாக, அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, தனது அரசு ஒடிசா அரசு மற்றும் ரயில்வேயுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறினார். கிழக்கு கடற்கரை ரயில்வேயின் சிபிஆர்ஓ அசோக் குமார் மிஸ்ரா கூறுகையில், "எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, விபத்து நிவாரண ரயில், அவசரகால மருத்துவ உபகரணங்கள் அனுப்பப்பட்டன. மூத்த அதிகாரிகள் விரைவில் சம்பவ இடத்திற்கு செல்ல உள்ளனர். டிஆர்எம் குர்தா ரோடு, ஜிஎம்/ஈசிஓஆர் மற்றும் பிற உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். விசாரணைக்குப் பிறகு தடம் புரண்டதற்கான காரணம் தெரியவரும். பாதையில் காத்திருக்கும் ரயில்களை திருப்பி விடுவதும், சீரமைப்புப் பணிகளைத் தொடங்குவதும் எங்கள் முதல் முன்னுரிமை'' என்று தெரிவித்தார்.
இலவச கேஸ் சிலிண்டர் வேண்டுமா? 2 நாள் தான் டைம்! உடனே அப்ளை பண்ணுங்க!