காங்கிரஸ் தலைமையை விமர்சித்து எழுதப்பட்ட ஷர்மிஸ்தா முகர்ஜியின் புத்தக வெளியீட்டு விழா.. ப.சிதம்பரம் பங்கேற்பு

By Ramya s  |  First Published Dec 13, 2023, 10:07 AM IST

காங்கிரஸ் தலைமையை விமர்சித்து எழுதப்பட்ட ஷர்மிஸ்தா முகர்ஜியின் புத்தக வெளியீட்டு விழாவில் ப.சிதம்பரம் பங்கேற்றது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.


முன்னாள் குடியரசு தலைவரின் பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி தனது தந்தையை நினைவு கூறும் வகையில் “Pranab My Father: A Daughter Remembers" என்ற புத்தகத்தின் முதல் பிரதியை கடந்த திங்கள்கிழமை வெளியிட்டார். டெல்லியில் உள்ள இந்தியா இன்டர்நேஷனல் சென்டரில் நடந்த இந்த வெளியிட்டு விழாவை காங்கிரஸ் தலைவர்கள் பலரும் புறக்கணித்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப சிதம்பரம் கலந்து கொண்டார். இதற்காக ப.சிதம்பரத்திற்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார் ஷர்மிஸ்தா. 

தொடர்ந்து மேடையில் பேசிய அவர் காங்கிரஸ் கட்சி மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அப்போது பேசிய அவர் “ ஒரு ஜெண்டில்மேன் தனது டைரியில் எழுதுவதையோ அல்லது தனது மகளிடம் சொல்வதையோ காங்கிரஸ் தலைவர்கள் கட்டுப்படுத்த விரும்புகிறார்களா? சமூக ஊடகங்களில் பாஜக ட்ரோல் செய்வதை போலவே காங்கிரஸ் நடந்து கொள்கிறது. அவர்களின் தலைவரை (ராகுல் காந்தியை) நான் விமர்சித்தால்பேச்சு சுதந்திரம் குறித்த அவர்களின் நிலைப்பாடு எங்கே போகும்?” என்று தெரிவித்தார்.

Latest Videos

undefined

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

காங்கிரஸ் தலைவர்கள் இல்லாதது மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த விழாவின் கௌரவ விருந்தினரும் முன்னாள் அரசு அதிகாரியுமான பவன் வர்மா பேசிய போது "சில கருத்துகளின் காரணமாக புத்தகம் ஒரு பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸிலிருந்து [சிதம்பரத்தைத் தவிர] வேறு யாரும் இங்கு இல்லை. அவர் ஒரு தீவிர காங்கிரஸ் விசுவாசி என்பதால் இங்கு வந்திருக்கலாம், ஆனால் எந்த தலைவருக்கும் விசுவாசமாக இல்லை.” என்று தெரிவித்தார்.

மறைந்த ஜனாதிபதியின் நுணுக்கமான டைரி பதிவுகளை ஷர்மிஸ்தா குறிப்புகளாகப் பயன்படுத்திய இந்த புத்தகம், அவரது 88வது பிறந்தநாளில் வெளியிடப்பட்டது. காங்கிரஸின் பல கொள்கைகள் இந்தப் புத்தகத்தில் விமர்சிக்கப்பட்டுள்ளன. இது தவிர, பிரதமர் நரேந்திர மோடியுடன் பிரணாப் முகர்ஜிக்கு உள்ள தொடர்பு குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மற்றும் பிரணாப் முகர்ஜி இடையே மிகவும் அன்பான உறவு இருந்தது என்று அந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது, மோடி பிரதமராவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பேர் இருவரிடமும் நல்ல உறவு இருந்தது. தனது தந்தையின் அரசியல் குரு இந்திரா காந்திக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே பல்வேறு சித்தாந்தங்கள் இருந்தபோதிலும் பல ஒற்றுமைகளை கண்டதாகவு ஷர்மிஸ்தா குறிப்பிட்டுள்ளார். 

AI தொழில்நுட்பத்தை இந்தியா முழுமையாக பயன்படுத்திக்கொள்ளும்: பிரதமர் மோடி உறுதி

முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு முதல் இந்திரா காந்தி, நரேந்திர மோடி வரை அனைவரின் பெயர்களும் இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பணமதிப்பு நீக்கம் பற்றியும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தில் காங்கிரஸ் கட்சி குறித்து பல விமர்சனங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே பல பெரிய தலைவர்கள் புத்தக வெளியீட்டில் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் மட்டும் இந்த விழாவில் கலந்து கொண்டது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

click me!