சமூக மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்காக இந்தியா செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் என்று உலகளாவிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தொழில்நுட்பத் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் ஆற்றல் AI தொழில்நுட்பத்துக்கு உள்ளது. ஆனால் மிகவும் எச்சரிக்கையுடன் அதைக் கையாள வேண்டும் என்று டெல்லியில் நடைபெற்ற உலகளாவிய செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டின் (GPAI) தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்து உலகம் முழுவதும் பெரும் விவாதம் நடைபெற்று வரும் நேரத்தில் இந்த உச்சிமாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, சுகாதாரத் துறையை மாற்றுவதற்கும் நிலையான வளர்ச்சிக்கு உதவுவதற்கும் இந்தியா எவ்வாறு AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் என்பதை எடுத்துரைத்தார்.
undefined
அப்படி நடத்தால் செத்துப் போயிவிடுவேன்... அரசியல் எதிர்காலம் குறித்து சவுகான் உருக்கமான பேச்சு!
"இந்தியாவில் எங்களின் வளர்ச்சி மந்திரம், சப்கா சாத், சப்கா விகாஸ். AI தொழில்நுட்பம் அனைவரும் பயன்பட வேண்டும் என்ற அடிப்படை நோக்கத்துடன் அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்களைத் தயாரித்துள்ளோம். சமூக மேம்பாடு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக AI திறன்களை முழுமையாகப் பயன்படுத்துவோம். AI தொழில்நுட்பத்தை நெறிமுறைகளுக்கு உட்பட்டு பொறுப்பாக பயன்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது" என்று பிரதமர் எடுத்துரைத்தார்.
AI தொடர்பான புதிய யோசனைகளில் இந்தியா மிக முக்கியமான அங்கம் வகிக்கிறது என்று சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, "இந்தியாவில், AI கண்டுபிடிப்புகள் மீதான ஈடுபாட்டைக் காண்கிறோம். இந்தியாவின் இளம் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் AI தொழில்நுட்பத்தின் வரம்புகளை ஆராய்ந்து வருகின்றனர்" என்றார்.
AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சிப் போக்கு ஜனநாயக விழுமியங்கள் சார்ந்து இருக்கவேண்டும் என்ற அவர், AI தொழில்நுட்ப பயன்பாட்டிற்கான உலகளாவிய நெறிமுறை தேவை என்றும் வலியுறுத்தினார்.
"AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சிப் பயணம் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு சிறந்த பலன்களை சமூகம் அடையும். கடந்த தசாப்தங்களில் தொழில்நுட்பத்தை அணுகுவதில் சமத்துவமின்மை இருந்தது. அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு இப்போது சமூகத்தை அத்தகைய தீங்குகளிலிருந்து பாதுகாக்க வேண்டும். ஜனநாயக விழுமியங்கள் தொழில்நுட்பத்துடன் சேரும்போது அது சாத்தியப்படும்" என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
ராஜஸ்தானில் புதிய முதல்வராகும் பிராமணர்! பஜன்லால் சர்மா யார்? பாஜகவில் அவர் சாதித்தது என்ன?