மகளின் பாசத்துக்காக ஏங்கும் ஷமி...! புகைப்படத்துடன் டுவிட்டரில் உருக்கமான பதிவு...!

 
Published : Mar 13, 2018, 03:00 PM ISTUpdated : Sep 19, 2018, 02:04 AM IST
மகளின் பாசத்துக்காக ஏங்கும் ஷமி...! புகைப்படத்துடன் டுவிட்டரில் உருக்கமான பதிவு...!

சுருக்கம்

shami expection his daughter love

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தனது டுவிட்டர் பக்கத்தில் தனது மகள் புகைப்படத்தைப் பகிர்ந்து உருக்கமாகக் கேப்ஷன் கொடுத்துள்ளது அவரின் ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது  அவருடைய மனைவி பல்வேறு புகார்களை வைத்தார்.

அதன்படி,ஷமிக்கு பல்வேறு பெண்களுடன் புகார் இருப்பதாகவும்,அவர் தொடர்ந்து பல ஆபாச சாட் செய்துள்ளதாகவும் அதனை ஸ்க்ரீன் சாட் எடுத்து அப்படியே பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் ஹசின் ஜகாத்.

இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,ஷமி குடும்பத்தினர் கூட தன்னை தாக்கியதாகவும்,ஷமி அவர் குடும்பத்தாருடன் சேர்ந்து தன்னை கொலை செய்ய முதற்பட்டதாகவும் கூறி இருந்தார்.

தற்போது ஒரு குழந்தை இருப்பதால் இதுவரை பொறுமை காத்து வந்ததாகவும்,கொடுமை தாங்க முடியாமல் இருப்பதால் இனி சட்ட ரீதியாக அணுக உள்ளதாகவும் பேட்டியின் போது தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து கொல்காத்தாவில் உள்ள லால்பசார் காவல்நிலையத்தில் ஷமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஹசின் ஜகான் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

இந்நிலையில், ஷமி தனது டுவிட்டர் பக்கத்தில் தனது மகள் புகைப்படத்தைப் பகிர்ந்து உருக்கமாகக் கேப்ஷன் கொடுத்துள்ளது அவரின் ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

கீபேட் போன் இருந்தா போதும்.. பெண்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை விதித்த கிராமம்!
ஒரு லட்சம் ரூபாய்க்கு காண்டம் வாங்கிய சென்னை நபர்! மிரளவிட்ட ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ரிப்போர்ட்!"