
ஜம்மு காஷ்மீரில் மத்திய ரிசர்வ் படை வீரர் தாக்கப்பட்டதற்கு நடிகர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்த வீரர் ஒருவரை அங்கிருந்த இளைஞர்கள் தாக்கிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேசத்தை பாதுகாக்கும் வீரர் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலுக்கு இச்செயலுக்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் கிரிக்கெட் வீரர்கள் கவுதம் கம்பீர் வீரேந்திர சேவாக் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இதற்கிடையே நடிகர் கமல்ஹாசனும் தனது கண்டனத்து டூவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார். இது குறித்த அவரது பதிவில், 'என் நாட்டு ராணுவ வீரர்களை தாக்கிய சம்பவம் அவமானத்துக்குரியது. வன்முறையில் ஈடுபடாமல் இருப்பதே வீரத்தின் உச்சம். பாதுகாப்புப் படை வீரர்கள் முன்னுதாரணமாக உள்ளனர்' என்று தெரிவித்துள்ளார்.