
நாடு முழுவதும் இந்தியை 8 ஆம் வகுப்பு வரை கட்டாய பாடமாக்க உத்தரவிடக்கோரி பா.ஜ.க. மூத்த தலைவர் அஸ்வினிகுமார் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மத்தியில் பா.ஜ.க. பொறுப்பேற்றது முதல் இந்தி மொழியை திணிக்க முயற்சித்து வருவதாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதற்கு சான்றாய் தமிழகத்தில் இருக்கும் மைல்கல்லில் ஆங்கிலத்தை நீக்கி விட்டு அதற்கு பதிலாக இந்தி மொழியை மத்திய அரசு புகுத்தி வருகிறது.
இந்தச் சூழலில் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு வரை இந்தி மொழியை கட்டாய பாடமாக்க வேண்டும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் அஸ்வினிகுமார் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் அவர் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது.