உருவானது ஷாகீன் புயல்… தமிழகத்துக்கு ஆபத்து… அலர்ட் தரும் வானிலை மையம்

By manimegalai aFirst Published Oct 1, 2021, 7:27 PM IST
Highlights

ஷாகீன் புயல் எதிரொலியாக தமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

டெல்லி: ஷாகீன் புயல் எதிரொலியாக தமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அரபிக்கடல் பகுதியில் ஷாகீன் புயல் உருவாகி உள்ளது. இந்த புயல் அடுத்த 6 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக மாறும் என்றும் அதன் காரணமாக வரும் 4ம் தேதி முதல் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் கூறி உள்ளது.

இது குறித்து இந்திய வானிலை மைய அதிகாரிகள் கூறி இருப்பதாவது: அரபிக்கடல் பகுதியில் உருவாகி உள்ள ஷாகீன் புயலால் மேற்கு வங்கம், பீகார், சிக்கிம், தமிழகம், கேரளா, குஜராத் மற்றும் கர்நாடகா ஆகிய 7 மாநிலங்களில் கனமழை பெய்யக்கூடும்.

வரும் 4ம் தேதி வரை இந்த மழையானது படிப்படியாக அதிகரித்துக் கொண்டே செல்லும். அக்டோபர் 4ம் தேதி காலை வரை கடல்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

வடகிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலை கொண்டு இருக்கும் இந்த ஷாகீன் புயலானது அடுத்த 6 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக உருவெடுக்கும். அதன் பின்னர் படிப்படியாக கடல்பகுதியில் இருந்து விலகும் என்று தெரிவித்து உள்ளனர்.

click me!