நீட் தேர்வை ரத்து செய்யுங்கள்… சுப்ரீம்கோர்ட்டில் மாணவர்கள் திடீர் மனு

By manimegalai aFirst Published Sep 29, 2021, 7:53 AM IST
Highlights

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தை மாணவர்கள் நாடி உள்ளனர்.

டெல்லி: நீட் தேர்வை ரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தை மாணவர்கள் நாடி உள்ளனர்.

கடந்த 12ம் தேதி நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேருபவர்களுக்கான நீட் தேர்வு நடைபெற்றது. நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் நீட் தேர்வு நடைபெற்று தான் வருகிறது.

அண்மையில் முடிந்த நீட் தேர்வின் போது பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இந் நிலையில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் மனு தாக்கல் செய்திருக்கின்றனர்.

ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது, எலக்ட்ரானிக் சாதனங்களை பயன்படுத்தி மோசடி, பயிற்சி மையங்களில் கேள்வித்தாள் லீக் ஆனது என பல முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆகையால் இந்தாண்டு தேர்வை ரத்து செய்ய மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மீண்டும் தேர்வை நடத்த வேண்டும் என்று தேசிய தேர்வுகள் முகமைக்கு மாணவர்கள் தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். முன்னதாக மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நீட் தேர்வு முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

click me!