கொரோனாவுக்கு ‘எண்ட் கார்டே’ இல்லையாம்… அதிர வைக்கும் உலக சுகாதார அமைப்பு

By manimegalai a  |  First Published Sep 29, 2021, 7:14 AM IST

கொரோனா ஒழிவதற்கான வாய்ப்பு என்பது இப்போதைக்கு இல்லை என்று உலக சுகாதார அமைப்பு கூறி இருக்கிறது.


டெல்லி: கொரோனா ஒழிவதற்கான வாய்ப்பு என்பது இப்போதைக்கு இல்லை என்று உலக சுகாதார அமைப்பு கூறி இருக்கிறது.

Tap to resize

Latest Videos

undefined

200 நாடுகளில் இன்னமும் விடாமல் சுற்றிக் கொண்டு இருக்கிறது கொரோனா. உலக நாடுகள் பலவும் தடுப்பூசிகளை கண்டுபிடித்து அவற்றை மக்களுக்கு செலுத்தி வருகின்றன. இந்தியாவிலும் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

ஒரு பக்கம் தடுப்பூசி போடப்பட மறுபுறம் தொற்றுகள் எண்ணிக்கை பதிவாகி கொண்டே தான் உள்ளது. இந் நிலையில் கொரோனா தொற்றானது நீண்ட காலத்துக்கு இருக்கும் என்றும், பெரும்பான்மையான மக்களுக்கு இந்த தொற்று பரவும் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்து உள்ளது.

இது குறித்து WHO தென்கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குநர் பூனம் கேதர்பால் சிங் செய்தியாளர்களிடம் கூறி உள்ளதாவது: கொரோனா வைரஸ் ரொம்ப நாள் இருந்து கொண்டே இருக்கும். தடுப்பூசிகள் இந்த தொற்று நீண்ட கால நோயா இல்லையா என்பதை முடிவு செய்யும்.

நாம் வைரசை கட்டுப்படுத்தினாலும் அது நம்மை கட்டுப்படுத்தாது. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு தொற்று பாதிப்பு குறைவு. ஆனாலும் இந்த தொற்று ஒழிய வாய்ப்பு இல்லை என்று கூறி இருக்கிறார்.

click me!