கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கும் பட்சத்தில் 144 தடை உத்தரவை வெளியிட மத்திய அரசு தயங்காது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
டெல்லி: கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கும் பட்சத்தில் 144 தடை உத்தரவை வெளியிட மத்திய அரசு தயங்காது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
undefined
நாடு முழுவதும் கொரோனா பரவல் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. கிட்டத்தட்ட 201 நாள்களுக்கு பின்னர் இன்று ஒருநாள் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கு கீழாக பதிவாகி உள்ளது.
அதே நேரத்தில் வேறு ஒரு முக்கிய விஷயத்தையும் மத்திய அரசு கவனித்து வருகிறது. அடுத்து தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்கள் வர உள்ளது. அப்போது மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பட்சத்தில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை உயர்ந்தால் என்னாகும் என்று மத்திய அரசு சிந்தித்து வருகிறது.
இது தொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு முக்கிய அறிவுறுத்தலை வழங்கி வருகிறது. இது குறித்து மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா மாநிலங்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது.
அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது: அடுத்து திருவிழா, பண்டிகை காலங்கள் நெருங்க உள்ளதால் மீண்டும் கொரோனா பரவல் வாய்ப்புகள் அதிகரிக்கலாம். ஆகையால் பண்டிகை காலத்தை முன்னிட்டு மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்புகளை அதிகப்படுத்த வேண்டும்.
தேவை என்றால் 144 தடை உத்தரவு பிறப்பித்துக் கொள்ள வேண்டும். கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை, தடுப்பூசிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.