உயிரை விட உரிமையே முக்கியம்..! ஊரடங்கு நாளிலும் தொடரப்போகும் ஷாகின்பாக் போராட்டம்..!

Published : Mar 21, 2020, 11:31 AM ISTUpdated : Mar 21, 2020, 11:35 AM IST
உயிரை விட உரிமையே முக்கியம்..! ஊரடங்கு நாளிலும் தொடரப்போகும் ஷாகின்பாக் போராட்டம்..!

சுருக்கம்

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறும் போது, சுய ஊரடங்கு நாளன்று சிறிய அளவிலான கொட்டகை அமைக்கப் 2 பேர் என்ற அளவிலேயே இருந்து போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாகவும் ஒவ்வொரு கொட்டகைகளுக்கும் இடையில் இடைவெளி அமைக்கப்பட்டு இருக்கும் எனவும் தெரிவித்தனர்.

உலகளவில் கொரோனா வைரஸ் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மொத்தமாக பலி எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் உலக நாடுகள் பீதியில் உறைந்துள்ளன. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரையில் 252 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு தனிமை சிகிச்சையில் இருக்கின்றனர். அதிகபட்சமாக மகாராஸ்டிராவில் 52 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஜெய்பூரில் கொரோனா பாதிப்பால் ஒருவர் மரணமடைந்ததை அடுத்து இந்தியாவில் பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் 22ம் தேதி ஊரடங்கு அமல்படுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அன்றைய தினம் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம் என பிரதமர் மோடி கூறியுள்ளார். இதனிடையே குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்கள் தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. எனினும் சில இடங்களில் போராட்டங்கள் நீடிக்கிறது. டெல்லி ஷாகின் பாக் பகுதியில் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. சுய ஊரடங்கு நாளான நாளையும் போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரே நாளில் 627 பேர் பலி..! இத்தாலியை புரட்டிப்போடும் கொரோனா..!

இதுதொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறும் போது, சுய ஊரடங்கு நாளன்று சிறிய அளவிலான கொட்டகை அமைக்கப்பட்டு 2 பேர் என்ற அளவிலேயே இருந்து போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாகவும் ஒவ்வொரு கொட்டகைகளுக்கும் இடையில் இடைவெளி அமைக்கப்பட்டு இருக்கும் எனவும் தெரிவித்தனர். போராட்டத்தில் 70 வயதை கடந்த பெண்களும் 10 வயதுக்குக் கீழான சிறுமிகளும் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் கூறியுள்ளனர். கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் டெல்லியில் 20க்கும் மேற்பட்டோர் ஒன்றாக கூட தடைவிதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு! சிறப்பு விவாதத்தைத் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!
கோவா கிளப் தீ விபத்தில் முக்கிய நபர் கைது.. யார் காரணம்? ரகசியத்தை உடைத்த முதல்வர்