உங்க நோக்கத்துக்குலாம் தாறுமாறா விற்கக்கூடாது.. மாஸ்க், கிருமிநாசினிக்கு இதுதான் விலை.. மத்திய அமைச்சர் அதிரடி

By karthikeyan VFirst Published Mar 21, 2020, 10:20 AM IST
Highlights

கொரோனா எதிரொலியாக மாஸ்க் மற்றும் கிருமிநாசினிகள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமான விலைக்கு விற்கப்படும் நிலையில், மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் அவற்றிற்கான அதிகபட்ச விலையை தெரிவித்துள்ளார். 
 

கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் தீவிரமாகிவரும் நிலையில், கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள மக்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

சீனா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகளில் அதன் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், இந்தியாவிலும் வேகமாக பரவிவருகிறது. எனவே மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல், தங்களை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

வீட்டை விட்டு வெளியே வர நேர்ந்தால், மாஸ்க் அணிந்து வருமாறும், கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்துக்கொள்வதுடன், கைகளை கண்கள், மூக்கு, காதுகள் ஆகியவற்றை தொடாமல் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கொரோனா அச்சுறுத்தலால் மக்கள் மாஸ்க் மற்றும் கைகழுவும் கிருமிநாசினிகளை அதிகமாக வாங்குகின்றனர். இதை பயன்படுத்தி மாஸ்க் மற்றும் கிருமிநாசினிகள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட பன்மடங்கு அதிமான விலைக்கு விற்கப்படுகிறது. அதனால் மக்கள் அவற்றிற்கு, கேட்கப்படும் விலையை கொடுக்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

மாஸ்க் மற்றும் கிருமிநாசினிகளை அதிகமான விலைக்கு விற்கக்கூடாது என்று மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன. ஆனாலும் பல இடங்களில் அதிகமான விலைக்குத்தான் விற்கப்படுகின்றன. 10 ரூபாய் மாஸ்க்கை 30 ரூபாய்க்கு விற்கின்றனர்.

இந்நிலையில், மத்திய உணவு மற்றும் நுகர்பொருள் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான், மாஸ்க் மற்றும் கிருமிநாசினிகளூக்கான அதிகபட்ச விலையை தெரிவித்துள்ளார். இதுகுறித்து டுவீட் செய்துள்ள ராம் விலாஸ் பஸ்வான், சாதாரண மாஸ்க்கை அதிகபட்சமாக 10 ரூபாய்க்குத்தான் விற்க வேண்டும். சர்ஜிக்கல் மாஸ்க்குகள் பிப்ரவரி 12ம் தேதிக்கு என்ன விலைக்கு விற்கப்பட்டதோ அதே விலைக்குத்தான் விற்க வேண்டும்.

அதேபோல 200 எம்.எல் கிருமிநாசினியை அதிகபட்சமாக 100 ரூபாய்க்குத்தான் விற்க வேண்டும் என்றும் வெவ்வேறு அளவிலான கிருமிநாசினிகளை அவற்றின் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விலைக்கே விற்க வேண்டும். அதைவிட கூடுதல் விலைக்கு விற்கக்கூடாது என்றும் ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
 

click me!