மகா கும்பமேளாவில் அதிகாலை 2 மணி அளவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 25 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மீதமுள்ள 5 பேரை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாக மகா கும்பமேளா டிஐஜி வைபவ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர். குறைந்தது 60 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இறந்தவர்களில் 25 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் மீதமுள்ள 5 பேரை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாகவும் மகா கும்பமேளா டிஐஜி வைபவ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
மகா கும்பமேளாவில் புனித நீராடிய நடிகை ஹேமா மாலினி!
Prayagraj, UP: 30 people have lost their lives in the Maha Kumbh stampede that took place between 1-2 AM. 25 people have been identified and the identification of the remaining 5 is being done: DIG Mahakumbh, Vaibhav Krishna படம்/காணொளி
— ANI (@ANI)மகா கும்பமேளாவை முன்னிட்டு கோடிக்கணக்கான மக்கள் கங்கைக்கரையை நோக்கிப் படையெடுப்பதால் பிரயாக்ராஜ் நகரம் முழுவதும் கூட்ட நெரிசல் காணப்படுகிறது. கூட்ட நெரிசலைச் சமாளிக்கும் நடவடிக்கையாக நகருக்குள் வரும் யாத்ரீகர்கள் சங்கமம் பகுதிக்கு வருவதைத் தவிர்த்து, அருகில் உள்ள கங்கைக் கரையில் புனித நீராடும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மகா கும்பமேளா: 1954-2025 வரை நடந்த 5 பெரிய விபத்துகளில் 800 பேர் உயிரிழப்பு!