இதுவரையில் கடந்த 1954ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையில் கும்பமேளாவில் நடைபெற்ற விபத்துகளில் 800 பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த 13 ஆம் தேதி முதல் மகா கும்ப மேளா விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் பிப்ரவரி 26ஆம் தேதி வரையில் நடைபெறும் இந்த விழாவில் கோடிக்கணக்கான பக்தர்கள் திரண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். இதில் ஏராளமான சாதுக்கள், மத்திய அமைச்சர் அமித் ஷா, பிரபலங்கள் என்று பலரும் புனித நீராடி வருகின்றனர்.
இந்த நிலையில் நான் மௌனி அமாவாசையான தை அமாவாசை நாளான இன்று பிரயாக்ராஜில் நடந்த மகா கும்பமேளா 2025ல் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 14க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மேலும், 30க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து எப்படி நடந்தது? முன்பு கும்பமேளாவில் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்திருக்கிறதா?
ஷாக்கிங் நியூஸ்! கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பக்தர்கள் உயிரிழப்பு! பலர் காயம்!
மகா கும்பமேளா 2025: உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளா 2025 செவ்வாய்-புதன் இரவு 1-2 மணிக்குள் பெரும் நெரிசல் ஏற்பட்டது. இதில் 14 க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தகவல். கும்பமேளாவில் பெரிய விபத்து நடப்பது இது முதல் முறை அல்ல. 1954 முதல் 2025 வரை கும்பமேளாவில் 5 பெரிய விபத்துகள் நடந்துள்ளன.
கும்பமேளாவில் எப்போதெல்லாம் நெரிசல் ஏற்பட்டது:
1954: பிரயாக்ராஜில் 1954ல் நடந்த கும்பமேளாவில் பிப்ரவரி 3ஆம் தேதி மௌனி அமாவாசை அன்று ஏற்பட்ட நெரிசலில் சுமார் 800 பேர் உயிரிழந்தனர். பலர் ஆற்றில் மூழ்கி இறந்தனர்.
மகா கும்ப மேளா 2025 கூட்ட நெரிசல் நிலைமை கட்டுக்குள் வந்துவிட்டது: முதல்வர் யோகி ஆதித்யநாத்!
1986: ஹரித்வாரில் 1986ல் நடந்த கும்பமேளாவில் ஏற்பட்ட நெரிசலில் சுமார் 200 பேர் உயிரிழந்தனர். பாதுகாப்புப் படையினர் பொதுமக்களை ஆற்றுக்கு செல்ல விடாமல் தடுத்ததால் நெரிசல் ஏற்பட்டது.
2003: மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் 2003ல் நடந்த கும்பமேளாவில் கோதாவரி ஆற்றில் புனித நீராடல் செய்ய வந்தவர்கள் மத்தியில் ஏற்பட்ட நெரிசலில் குறைந்தது 39 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
2013: பிப்ரவரி 10, 2013 அன்று கும்பமேளா நடைபெற்ற போது அலகாபாத் ரயில் நிலையத்தில் நடைமேம்பாலம் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட நெரிசலில் 42 பேர் உயிரிழந்தனர். 45 பேர் காயமடைந்தனர்.
மகா கும்பமேளா: ராணுவக் கட்டுப்பாடு ஏன் இல்லை? - பிரேமானந்த் பூரி கேள்வி!
2025: பிரயாக்ராஜில் 144 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற மகா கும்பமேளாவில் மௌனி அமாவாசை அன்று இரண்டாவது அமிர்த ஸ்நானத்தின் போது 8-10 கோடி மக்கள் கூடியிருந்தனர். செவ்வாய்-புதன் இரவு 1-2 மணிக்குள் ஏற்பட்ட நெரிசலில் 14 பேர் உயிரிழந்ததாக தகவல்.