Mahakumbh Mela 2025: மகா கும்ப மேளா 2025 ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு பிறகு இப்போது நிலைமை கட்டுக்குள் வந்துவிட்டது என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
Mahakumbh Mela 2025: உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் செவ்வாய்-புதன் இரவு நடுவே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் பலர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து, மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், வதந்திகளுக்கு வேண்டாம், நிலைமை கட்டுக்குள் உள்ளது என்று கூறினார். செய்தியாளர்களிடம் பேசிய யோகி, "பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. சுமார் 8-10 கோடி பக்தர்கள் வந்துள்ளனர். நேற்றும் 5.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர். பக்தர்கள் சங்கமத்தில் குளிக்க முற்பட்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
மகா கும்பமேளா: ராணுவக் கட்டுப்பாடு ஏன் இல்லை? - பிரேமானந்த் பூரி கேள்வி!
நிர்வாகம் முழுவதுமாக களத்தில் உள்ளது. நள்ளிரவு 1-2 மணிக்குள் அகாடா மார்க்கில் அமிர்த ஸ்நானத்திற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. தடுப்புகளைத் தாண்டிச் செல்ல முயன்ற சில பக்தர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது." முதல்வர் கூறுகையில், "சில பக்தர்கள் படுகாயமடைந்துள்ளனர். பக்தர்கள் பாதுகாப்பாகக் குளிப்பதற்கு நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி காலை முதல் நான்கு முறை நிலைமையை விசாரித்தார். உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் ஆளுநர் ஆனந்திபென் படேல் ஆகியோரும் தொடர்ந்து தகவல்களைப் பெற்று வருகின்றனர்."
ஷாக்கிங் நியூஸ்! கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பக்தர்கள் உயிரிழப்பு! பலர் காயம்!
सभी पूज्य संतों, श्रद्धालुओं, प्रदेश एवं देश वासियों से मेरी अपील है कि अफवाह पर कोई ध्यान न दें, संयम से काम लें, प्रशासन आप सभी की सेवा के लिए तत्परता से कार्य कर रहा है... pic.twitter.com/r3qAkveJoz
— Yogi Adityanath (@myogiadityanath)
கூட்டம் குறைந்த பிறகு அகாடாக்கள் செல்லும்
முதல்வர் கூறுகையில், "பிரயாக்ராஜில் நிலைமை தற்போது கட்டுக்குள் உள்ளது, ஆனால் கூட்ட நெரிசல் தொடர்கிறது. அகாடா நிர்வாக அதிகாரிகளிடம் பேசினேன். ஆச்சார்ய மகா மண்டலேஷ்வரர்கள் மற்றும் துறவிகளிடமும் பேசினேன். பக்தர்கள் முதலில் குளிக்கட்டும், கூட்டம் குறைந்த பிறகு நாங்கள் குளிக்கச் செல்வோம் என்று துறவிகள் என்னிடம் கூறினர்." வதந்திகளுக்கு செவிசாய்க்க வேண்டாம், பொறுமையாக இருங்கள். இது அனைவருக்குமான நிகழ்வு. பக்தர்களுக்குச் சேவை செய்ய நிர்வாகம் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக உள்ளன."
மகா கும்பமேளா 2025 சம்பவம் குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் பேசி வரும் பிரதமர் மோடி!