
பிளாஸ்டிக் டப் விற்பனை செய்யும் வியாபாரியின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. வித்தியாசமான வீடியோக்கள் இணையத்தில் வைரலாவது வழக்கம். அந்த வகையில் தினந்தோறும் எதாவது ஒரு வீடியோ வைரலாகும். அந்த வகையில் இன்று வைரலான வீடியோ பார்ப்பவர்களை சிரிப்பில் ஆழ்த்தியுள்ளது. தெருவோரத்தில் பிளாஸ்டிக் டப் விற்பனை செய்யும் வியாபாரி ஒருவர் பிளாஸ்டிக் டப்பை விற்பனை செய்யும் காட்சி தான் அது.
இதையும் படிங்க: இந்தியாவின் 11 மர்மங்கள்| அறிந்தால் அதிர்ச்சியாவீர்கள்
அந்த வீடியோவில், அந்த வியாபாரி, தனது பிளாஸ்டிக் டப்பின் உறுதித்தன்மையை காட்ட அதனை வேகமாக தெருவில் அடிப்பது, வளைப்பது, இரு டப்புகளை ஒன்றுடன் ஒன்றை அடித்து காட்டுவது போன்ற செயல்களை செய்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அந்த வியாபாரியின் வியாபார உத்தியை பார்த்து வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
இதையும் படிங்க: பிரதமர் மோடியின் மருமகளிடம் கைவரிசை காட்டியவர் கைது
மேலும் அவரது வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து அந்த வீடியோவுக்கு பலரும் லைக் மற்றும் கமெண்ட் செய்துள்ளனர். 16 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவை ஐபிஎஸ் அதிகாரி திபன்சு கப்ரா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த வீடியோவுக்கு ஏராளமனோர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.