செல்ஃபி மோகத்தால் பலியான கைக்குழந்தை! எஸ்கலேட்டரில் மோதி கீழே விழுந்து உடல் சிதறி இறந்த சோகம்!

 
Published : May 15, 2018, 11:53 AM ISTUpdated : Sep 19, 2018, 02:22 AM IST
செல்ஃபி மோகத்தால் பலியான கைக்குழந்தை! எஸ்கலேட்டரில் மோதி கீழே விழுந்து உடல் சிதறி இறந்த சோகம்!

சுருக்கம்

Selfie Mortal is dead baby

செல்ஃபி எடுக்க முயன்றபோது, எஸ்கலேட்டரில் மோதி பெண்ணின் கையில் இருந்த 10 மாதக் கைக்குழந்தை, கை நழுவிக் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானின் கங்காநகரில் உள்ள சிஜிஆர் மாலுக்கு பெண் ஒருவர் தன் பத்து மாதக் கைக்குழந்தை மற்றும் கணவருடன் சென்றுள்ளார். அங்கு மூன்றாவது தளத்திற்குச் செல்ல எஸ்கலேட்டரின் உதவியை நாடியுள்ளார். அப்போது அந்தப் பெண்ணின் கணவர் எஸ்கலேட்டர் இயக்கத்தில் இருக்கும் சமயத்தில் ஒரு செல்ஃபி எடுக்குமாறு அந்தப் பெண்ணிடம் கூறியுள்ளார்.

அப்போது, அந்த பெண் செல்ஃபி எடுக்க முயன்ற போது அந்தப் பெண் கையிலிருந்த 10 மாதக் கைக்குழந்தை நிலை தடுமாறி எஸ்கலேட்டருக்கும் நடைபாதைக் கைபிடிக்கும் இடையே மோதிக் கீழ் தளத்தில் விழுந்தது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அந்தக் குழந்தையை சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுசென்றுள்ளனர். அங்கு தரையில் மோதிய உடனேயே அந்தக் குழந்தையின் உயிறிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து தற்போது போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதேபோல, நாளுக்கு நாள் செல்ஃபி மோகத்தால் மரணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. சில நாட்களுக்கு முன்பு ஓடிஸா மாநிலத்தில் கரடியுடன் செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் உயிரிழந்தது குறுப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!
பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!