“ஐயப்பன் கோவிலுக்கு மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல்..!!!” – துப்பாக்கி ஏந்திய வீரர்கள் பாதுகாப்பு

Asianet News Tamil  
Published : Nov 28, 2016, 03:15 PM ISTUpdated : Sep 19, 2018, 02:14 AM IST
“ஐயப்பன் கோவிலுக்கு மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல்..!!!” – துப்பாக்கி ஏந்திய வீரர்கள் பாதுகாப்பு

சுருக்கம்

மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தல் காரணமாக சபரிமலை ஐயப்பன்கோவில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் அட்டகாசம் சமீபகாலமாக அதிகரித்து உள்ளது. அவர்கள் தொடர் தாக்குதலிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் காட்டுப்பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கும் போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இந்த சண்டையில் மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த தேவராஜ் மற்றும் அனிதா ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

இந்நிலையில் மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தல் காரணமாக சபரிமலை ஐயப்பன்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஐயப்பன் கோவிலை சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

இனி 45 நாள் காத்திருக்க வேண்டாம்! புக் செய்ததும் இன்ஸ்டண்டாக டெலிவரியாகும் சமையல் கேஸ்.. HPCL அதிரடி
Shirdi Temple: சாய்பாபா தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களே கவனிக்கவும்.. ஜூலையிலிருந்து புதிய கட்டணம் அமல்!