national herald: காங்கிரஸ் கட்சியின் நேஷனல் ஹெரால்டு அலுவலகத்துக்கு சீல் வைப்பு: அமலாக்கப்பிரிவு நடவடிக்கை

By Pothy RajFirst Published Aug 3, 2022, 5:47 PM IST
Highlights

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டில் விசாரித்து வரும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள், நேஷனல் ஹெரால்டு அலுவலகத்துக்கு இன்று சீல் வைத்தனர் என்று என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டில் விசாரித்து வரும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள், நேஷனல் ஹெரால்டு அலுவலகத்துக்கு இன்று சீல் வைத்தனர் என்று என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்ததாக கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.  அதற்குரிய ஆதாரங்களைத் திரட்டும் நோக்கில் நேற்று அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நேஷனல் ஹெராலாட் அலுவலகத்தில் ரெய்டு நடத்தினர்.

உச்ச நீதிமன்றம் வழங்கியது ஆபத்தான தீர்ப்பு: அமலாக்கப்பிரிவு அதிகாரம் பற்றி 17 எதிர்க்கட்சிகள் அறிக்கை

 மத்திய டெல்லியில் உள்ள ஐடிஓ, பகதூர்ஷா ஜாபர் மார்கில் அமைந்துள்ள ஹெரால்டு ஹவுஸில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நேற்று ரெய்டு நடத்தினர்.  வருகிறார்கள். அசோசியேட் ஜர்னல் நடத்தும் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை, அதன் சொத்துக்கள் இருக்குமிடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி எம்.பி.யிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி முடித்துவிட்டனர். இந்த விசாரணைக்குப்பின் இந்த ரெய்டு நடத்தப்பட்டது. ஆனால், ரெய்டு நடத்தப்பட்ட மறுநாளே அலுவலகத்தை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

5g spectrum india: 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் மிகப்பெரிய ஊழல்: கொளுத்திப் போட்ட திமுக எம்.பி. அ.ராசா

நேஷனல் ஹெரால்டு வழக்கு பின்னணி

 முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தை தொடங்கினார். அந்த நிறுவனம் மூலம், நேஷனல் ஹெரால்டு என்ற நாளேடு தொடங்கப்பட்டது. இந்தநிறுவனத்தை நடத்த ரூ.90 கோடியை காங்கிரஸ் கட்சி கடனாகக் கொடுத்தது. இந்த கடனை திருப்பிச் செலுத்தாமல் நேஷனல் ஹெரால்ட் நிறுவனம் நஷ்டப்பட்டு கடந்த 2008ம் ஆண்டு நாளேடு நிறுத்தப்பட்டது. பின்னர் 2016ம் ஆண்டு முதல் நேஷனல் ஹெரால்ட் நாளேடு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தின் பங்குகளை ரூ.50 லட்சத்துக்கு யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டபோது, அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தில் பங்குதாரர்களின் ஒப்புதல்களைப் பெறவில்லை. இந்த நிறுவனத்தின் 76% பங்குகள் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியிடமும், 24 % பங்குகள் ராகுல் காந்தியிடமும் உள்ளன. 

ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள அசோசியேட்டட் ஜர்னல் பங்குகளை வெறும் ரூ.50 லட்சத்துக்கு மாற்றியதில் முறைகேடு நடந்ததாகக் கூறி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சுவாமி  வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

national herald case:காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமான நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் அமலாக்கப்பிரிவு திடீர் ரெய்டு

இந்நிலையில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எம்.பி.ராகுல் காந்தி இருவரிடமும்  அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தி முடித்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.

click me!