‘இந்தியா’ – பாகிஸ்தான் எல்லைக்கு சீல்..!! - 2018 வரை தீவிர கண்காணிப்பு : ராஜ்நாத் சிங்

First Published Oct 8, 2016, 6:05 AM IST
Highlights


இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவுவதால் எல்லை பகுதிகளில்  சீல் வைத்து கண்காணிக்கப்படும் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

உரி தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான்  பயங்கரவாதிகள் முகாம்களை அழித்தது. இதனால் இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

இதனால் இந்திய எல்லையில் பதற்றம் நிலவுவதால் எல்லையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

தொடர்ந்து பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பயங்கரவாதிகளின் இந்த முயற்சிக்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் காஷ்மீர் ஆகிய 4 மாநில முதலமைக்ச்சர்களுடன் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங்,

இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால் வருகின்ற 2018-ம் ஆண்டு வரை எல்லை பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும், பாகிஸ்தான் நாட்டுடனான இந்தியாவின் ஒட்டுமொத்த எல்லையும் சீல் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். மேலும்,   நாட்டின் பாதுகாப்பில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை எனராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

click me!