துணை ஆளுனர், முதல்வர் இடையே ‘ஈகோ’ – டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

First Published Oct 8, 2016, 5:33 AM IST
Highlights


புதுடெல்லி மக்களின் உடல் நலம் மற்றும் சுகாதாரத்தை காப்பதில், மாநில அரசின் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை' என உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியது.

டெல்லியில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தில், கடந்த 2 மாதங்களுக்கு மேலாக டெங்கு, சிக்குன்குனியா உள்பட பல்வேறு மர்ம காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெல்லி மக்களின் உடல் நலம் மற்றும் சுகாதாரத்தில் கவனம் செலுத்துவது குறித்து, துணை நிலை ஆளுனர், மாநில முதல்வர், சுகாதார அமைச்சர் இடம்பெற்ற குழு கூடி, முடி வெடுக்க வேண்டும்' என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, நேற்று முன்தினம் நடந்த குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த அறிக்கைகைள், உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டன.

இதைதொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த, நீதிபதிகள், எம்.பி.லோகுர், அமிதவ்ராய் இடம்பெற்ற பெஞ்ச், டெல்லி மக்களின் உடல் நலத்தை காப்பதில், மாநில அரசு மெத்தனமாக செயல்படுகிறது. துணை நிலை ஆளுனர், முதல்வர் ஆகியோர், ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டுவதை நிறுத்தி, மக்கள் நலனில் அக்கறை காட்ட வேண்டும்.
மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை. துணை நிலை ஆளுனர் நஜீப்ஜங், முதல்வர் கெஜ்ரிவால் ஆகியோர் பங்கேற்ற கூட்டு கூட்டத்தின் முடிவுகள் அதிருப்தி அளிக்கின்றன. மக்களை காப்பது எப்படி என யோசித்து, அதற்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
துணை நிலை ஆளுனர் தலைமையில், மீண்டும் குழு கூடி, முடிவெடுக்க வேண்டும். யார் பெரியவர் என்ற அதிகார போட்டிக்கான நேரம் இதுகிடையாது. எந்த மாதிரியான திட்டங்களை டெல்லி அரசு செயல்படுத்த போகிறது என்பதை, வரும் 17ம் தேதிக்குள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

click me!