
இந்தியாவின் பிரபல வாசனை திரவியப்பொருள் பெண் ஆராய்ச்சியாளர் மோனிகா குர்தே, கோவாவில் கொடூரமான முறையில் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் மோனிகா குர்தே (39). அழகு பெண்களின் விருப்பத்திற்பே வாசனை திரவிய பொருட்கள் தயாரிப்பு மற்றும் அது குறித்த ஆராய்ச்சியில் இந்திய அளவில் புகழ்பெற்று விளங்கினார்.
கடந்த ஜூலை மாதம் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றின் அழைப்பின் பேரில் கோவா மாநிலத்தில் உள்ள வாசனை திரவிய ஆராய்ச்சி மையத்துக்கு சென்றார். அங்கு சங்கோல்டா என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், கணவருடன் தங்கியிருந்தார்.
நேற்று காலை இவரது வீட்டில் வேலை செய்பவர், சென்றார். நீண்ட நேரமாக மோனிகா குர்தே, தனது படுக்கை அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த அவர், கதவை திறந்து உள்ளே சென்றபோது, கை, கால்கள் கட்டப்பட்டு, நிர்வாண நிலையில் மோனிகா குர்தே சடலமாக கிடந்தார். இதை பார்த்து, அவர் அதிர்ச்சியடைந்தார்.
தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு வந்த உள்ளூர் போலீசார், சடலத்தை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளியிடம் விசாரித்தபோது, மோனிகா குர்தேவை தேடி யாரும் வரவில்லை என அவர் கூறினார்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிஒருவர் கூறுகையில், மோனிகா குர்தேவின் கணவர் வெளியே சென்றிருப்பதை அறிந்த, மர்மநபர்கள் சிலர் வீடு புகுந்து அவரை பலாத்காரம் செய்ய முயற்சி செய்திருக்கலாம். அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை படுக்கையிலே கை ,கால்களை கயிற்றால் கட்டி பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கலாம்.
மேலும், வீட்டில் உள்ள நகை, பணம் கொள்ளை போகவில்லை. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கையில் விபரம் தெரியும். அடுக்மாடி குடியிருப்பில் உள்ளவர்களிடமும் விசாரணை நடக்கிறது என்றார்.