கொரோனா வைரஸ் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சீனாவில் பரவி வரும் கொரோனா இந்தியாவையும் பாதிக்கக்கூடும் என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்படுத்தி உள்ளது. மீண்டும் கொரோனா வைரஸ் சீனாவில் அதிகரித்து வருகிறது. இது மீண்டும் உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
5 முதல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் மருத்துவ நிபுணர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் மீண்டும் லாக்டவுன் செயல்படுத்தப்படுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிங்க..ஆளுநர் தான் பொறுப்பு.. திமுக 1,000 தரவில்லை? 2024 கூட்டணி யாருடன்? சஸ்பென்ஸை உடைத்த அன்புமணி ராமதாஸ்
இந்நிலையில் மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிப்பதை தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு போடப்படும் என்றும், அதனை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் மூடப்படும் என்றும் பிரபல இந்தி செய்தி ஊடகங்களில் தகவல் வெளியாகி இருந்தது.
மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம், இந்த செய்தியை வதந்தி என கூறியுள்ளது. இது அதிகாரப்பூர்வ செய்தி அல்ல என்றும், இதுபோன்ற செய்தியை வெளியிடும்முன் தகவலை சரிபார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. இதில் இருந்து இந்த செய்தி தவறானது என்று நிரூபணம் ஆகியுள்ளது.
இதையும் படிங்க..நியூ இயரில் மாமியாருடன் ஓட்டம் பிடித்த மருமகன்.. போலீசிடம் கதறிய மாமனார்.. பரபரப்பு சம்பவம்