பேசாமல் இருந்த தோழியை சரமாரியாகக் கத்தியால் குத்திய இளைஞர்

Published : Jan 04, 2023, 06:35 PM ISTUpdated : Jan 04, 2023, 06:38 PM IST
பேசாமல் இருந்த தோழியை சரமாரியாகக் கத்தியால் குத்திய இளைஞர்

சுருக்கம்

டெல்லியில் பட்டப்பகலில் இளம்பெண்ணை அவரது நண்பரே சரமாரியாகக் கத்தியால் குத்தித் தாக்கிவிட்டுத் தப்பியோடிய கொடுமை நிகழ்ந்துள்ளது.

தலைநகர் டெல்லியில் ஆதர்ஷ் நகர் பகுதியில் வைத்து 21 வயது இளம்பெண்ணை ஒரு இளைஞர் கத்தியால் நான்கைந்து முறை குத்திவிட்டுத் தப்பிச் செல்லும் பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது.

தாக்கிவிட்டுத் தலைமறைவான இளைஞரை டெல்லியின் அம்பாலா என்ற இடத்தில் காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர். சுக்விந்தர் சிங்கும் தாக்கப்பட்ட அந்த இளம்பெண்ணும் நீண்ட காலமாக நண்பர்களாக இருந்துள்ளனர். கொஞ்ச நாட்களாக அந்த இளம்பெண் சுக்விந்தரிடம் பேசாமல் இருந்திருக்கிறார்.

கொரோனாவை தங்கக் கடத்தலுக்கு பயன்படுத்திய கடத்தல் கும்பல்கள்

இதனால், வெறுப்படைந்த சுக்விந்தர் தன் தோழியை கொடூரமாகத் தாக்கியிருக்கிறார் என்று காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட இளம்பெண் தற்போது டெல்லியில் உள்ள பாபு ஜக்ஜீவன் ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இப்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 307ன் கீழ் சுக்விந்தர் சிங் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது.

அண்மையில் டெல்லியில் இளம்பெண் கார் சக்கரத்தில் சிக்கி பல கிலோமீட்டர் தொலைவுக்கு இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருவது குறிப்பிட்டத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

கிருஷ்ணர் சிலையை திருமணம் செய்துகொண்ட இளம்பெண்! விமரிசையாக நடத்தி வைத்த கிராம மக்கள்!
பாஜகவின் வாக்கு திருட்டு அட்டூழியம்..! ஆர்எஸ்எஸின் அத்துமீறல்..! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேச அட்டாக்..!