10ம் வகுப்பு தேர்வு எழுதிக்கொண்டிருந்த மாணவி மீது விழுந்த ஃபேன்.. சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.!

Published : May 03, 2022, 11:58 AM IST
10ம் வகுப்பு தேர்வு எழுதிக்கொண்டிருந்த மாணவி மீது விழுந்த ஃபேன்.. சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.!

சுருக்கம்

ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் உள்ள சோமந்தி பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிக் கொண்டிருந்த போது மின்விசிறி கழன்று தேர்வு எழுதிக்கொண்டிருந்த மாணவி மீது விழுந்தது. இதனால், மாணவி காயமடைந்தார். 

ஆந்திராவில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிக்கொண்டிருந்த மாணவி மீது ஃபேன் விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, மாணவிக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் உள்ள சோமந்தி பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிக் கொண்டிருந்த போது மின்விசிறி கழன்று தேர்வு எழுதிக்கொண்டிருந்த மாணவி மீது விழுந்தது. இதனால், மாணவி காயமடைந்தார். 

இதையடுத்து மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு எந்த ஆபத்தும் இல்லை என்று அரசு மருத்துவர்கள் உறுதிசெய்த பிறகு தொடர்ந்து மாணவி தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்.  தேர்வுக்கு பின்னர் மாணவிக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது மாணவி நலமாக உள்ளதமாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Bus fares: விமானத்தில் மட்டுல்ல இனி பேருந்திலும் போக முடியாது போல.! பிளைட் டிக்கெட் ரேட்டிற்கு உயர்ந்த பேருந்து கட்டணம்.!
Check Mate: மோடியுடன் புதின் குடித்த பாயாசத்தால், கலங்கிய அமெரிக்க அதிபரின் அடிவயிறு...! இந்தியாவை முக்கிய கூட்டாளி என அறிவித்த டிரம்ப்.!